BSNLEU - TNTCWU மாநில சங்கங்கள், ஒப்பந்த ஊழியர்களுக்காக, "காத்திருப்பு போராட்டம்" நடத்த மாநில அளவில் அறைகூவல் கொடுத்திருந்தது. நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, பல்வேறு மாவட்டங்களில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என 3 மாத சம்பளம் கிடைக்கப் பெறாத காரணத்தால் மாநில சங்கங்கள் இந்த போராட்ட அறைகூவலை கொடுத்திருந்தது.
அதன்படி, காத்திருப்பு போராட்டம் 17/09/2018 நேற்று துவங்கி இன்று, 18/09/2018ம் நீடித்தது. BSNLEU - TNTCWU சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, நமது மாவட்டத்தில், சேலம் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் ஒன்று பட்ட போராட்டத்தை கண்டு அஞ்சி நடுங்கிய கார்ப்பரேட் நிர்வாகம், இனியும் தாமதித்தால் நிலைமை மோசமடையும் என்பதை உணர்ந்து, வேறு வழியின்றி 9.3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அதன் அடிப்படையில், மாநில சங்கங்கள் முடிவின்படி மதியம் 01.30 மணி அளவில் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.
தோழர்களே! ஒன்று பட்ட போராட்டம் மூலம் தான் இந்த வெற்றி சாத்தியமாகியது. போராட்டத்தில் கலந்து கொண்ட அத்துணை தோழர்களுக்கும் இரண்டு மாவட்ட சங்கங்களும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.
நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்,
E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU
M . செல்வம், மாவட்ட செயலர், TNTCWU
18/09/2018 இன்றைய போராட்ட காட்சிகள்