Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, September 17, 2018

ஒப்பந்த ஊழியர்களுக்காக காத்திருப்பு போராட்டம்!

BSNLEU - TNTCWU மாநில சங்கங்கள் ஒப்பந்த ஊழியர்களுக்காக காத்திருப்பு போராட்டம் நடத்த மாநில அளவில் அறைகூவல் கொடுத்திருந்தது. நமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, பல்வேறு மாவட்டங்களில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என 3 மாத சம்பளம் கிடைக்கப் பெறாத காரணத்தால் மாநில சங்கங்கள் இந்த போராட்ட   அறைகூவளை கொடுத்திருந்தது. 

அதன்படி, காத்திருப்பு போராட்டம் 17/09/2018, இன்று சேலம் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பு துவங்கியது. இன்று வராத தோழர்கள் நாளை, காலை 10 மணி அளவில் சேலம் பொது மேலாளர் அலுவலகத்திற்கு வரவேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU 
M . செல்வம், மாவட்ட செயலர், TNTCWU 


இன்றைய போராட்ட காட்சிகள்