29.07.2018 TNTCWU மாவட்ட செயற்குழு முடிவின்படி, ஒப்பந்த ஊழியர்களின் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கிளைகளில் சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று, 14.08.2018, சேலம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு மாவட்டம் முழுவதிலுமிருந்து ஊழியர்கள் திரளாக கலந்து கொண்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். TNTCWU மாவட்ட செயலர் தோழர் M . செல்வம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.
CITU தமிழ் மாநில குழு உறுப்பினர் தோழர் R . வெங்கடபதி, போராட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் தம் உரையில் ஒப்பந்த ஊழியர்கள் சம்மந்தமான தொழிலாளர் நல சட்டங்கள், குறைந்த பட்ச ஊதியம், வர்க்க அரசியல், EPF/ESI சமூக நல சலுகைகள் போன்ற விஷயங்களை விளக்கி பேசினார்.
BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 250 தொழிலாளர்கள் (50 பெண்கள் உட்பட) திரளாக கலந்து கொண்ட இந்த போராட்டத்தை தோழர் C . பாஸ்கர், மாவட்ட பொருளர் நன்றி கூறி முடித்து வைத்தார். தோழர் P . செல்வம், TNTCWU மாவட்ட உதவி தலைவர் ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினார்.
BSNLEU / TNTCWU மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் திரளாக போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
நியாமான கோரிக்கைகளுக்காக நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து திரளான ஊழியர்களை பங்கேற்க செய்த கிளை சங்கங்களை, நமது இரண்டு மாவட்ட சங்கங்களும் மனதார பாராட்டுகிறது.
நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தை
ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு உடனடியாக திரு. S . சபீஷ், ITS., PGM., சேலம் அவர்களை சந்தித்து கோரிக்கைகள் சம்மந்தமாக விவாதித்தோம். திறனுக்கேற்ற கூலி , கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க DGM (PLG), DGM(HR/ADMN) ஆகியோரை பொறுப்பாக்கி, உத்தரவிட்டார். பிற கோரிக்கைகள் சம்மந்தமாக, ஒப்பந்ததாரருக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பேச்சு வார்த்தையில் DGM(HR/ADMN) அவர்களும் கலந்து கொண்டார். மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்