RTP சேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கேரளா உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் நமது தோழர்கள் பல வழக்கு தொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். இந்த தீர்ப்பை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்திடம் கோரியுள்ளது. நிதி நிலையினை கணக்கில் கொண்டு நிர்வாகம் இதுவரை நமக்கு சாதகமான பதிலை தரவில்லை.
நமது தோழர்கள் பலரும் இதற்காக நீதிமன்றத்தை அணுகுவது என்றும் அதற்கு தமிழ் மாநில சங்கம் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் அத்தகைய தோழர்களுக்கு உதவி செய்ய நமது மாநில உதவி செயலாளர் தோழர் S.சுப்ரமணியன்(மொபைல் எண்:- 9443470780), மாநில அமைப்பு செயலாளர் தோழர் K.பழனிகுமார் (மொபைல் எண்:-9443402215) மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் தோழர் S.அஸ்லாம் பாஷா (மொபைல் எண்:- 9443145857) கொண்ட ஒரு குழுவை தமிழ் மாநில சங்கம் அமைத்துள்ளது. இவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள தோழர்களின் விவரங்களை சேகரித்து சென்னையில் உள்ள நமது மாநில உதவி செயலாளர் தோழர் M.முருகையா அவர்களின் உதவியோடு வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து தோழர்களுக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்திடுவார்கள்.
கிளை செயலாளர்கள், தங்கள் கிளையில் உள்ள இத்தகைய தோழர்களின் விவரங்களை ஒரு வார காலத்திற்குள் மாவட்ட சங்கத்திடம் தெரிவிக்க வேண்டுகிறோம். மாவட்ட சங்கம், இந்த குழுவில் உள்ள மூன்று தோழர்களிடம் அந்த தகவல்களை தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
(தமிழ் மாநில சங்க தகவல்படி)