19.07.2018 அன்று பரமத்தி வேலூர் கிளையின் 9வது மாநாடு, வேலூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர் தோழர் R . குழந்தைசாமி, தலைமை தாங்க, முதல் நிகழ்வாக சங்க கொடியை மூத்த தோழர் P . ரத்தினசபாபதி விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர் அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் R . ரமேஷ், கிளை செயலர், அனைவரையும் வரவேற்றார்.
ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜு, மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார்.
தோழர்கள் S . ராமசாமி, மாவட்ட உதவி செயலர், P. M. ராஜேந்திரன்,மாவட்ட உதவி பொருளர், R . அபிராமசுந்தரி, மாநில குழு உறுப்பினர், உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் மாநிலம், கிளை செயலர்கள் தோழர் M . ராஜலிங்கம், (திருச்செங்கோடு நகரம்), தோழர் சின்னசாமி (நாமக்கல் ஊரகம்), தோழர் ராஜகோபால், நாமக்கல் நகர கிளை தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தோழர் S . தமிழ்மணி, தமிழ் மாநில உதவி தலைவர் மாநாட்டு சிறப்புரை வழங்கினார். செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தோழர்கள் R . குழந்தைசாமி, R . ரமேஷ், D. மேகநாதன், ஆகியோர் முறையை தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
தீர்மானங்கள் நிறைவேற்றிய பின், தோழர் D. மேகநாதன், கிளை பொருளர் நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார். கொடிகள், தோரணங்கள், விளம்பரங்கள், முழுமையான ஊழியர் பங்கேற்பு, சுவையான சிற்றுண்டி, என நேர்த்தியான ஏற்பாடுகள் செய்த கிளை சங்கத்தை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது. புதிய நிர்வாகிகள் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்