நமது மாவட்டத்தில், BSNL WWCC, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம், 06.07.2018 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பு குழுவின் நோக்கம், BSNL WWCC அமைப்பு, அகில இந்திய, மாநில அளவிலான அதன் செயல்பாடுகள், 3வது மாநில மாநாடு, உள்ளிட்ட பல விஷயங்களை தோழர்கள் E . கோபால், மாவட்ட செயலர், மற்றும் தோழர் S . தமிழ்மணி, தமிழ் மாநில உதவி தலைவர் ஆகியோர் விளக்கி சிறப்புரை வழங்கினார்கள்.
மாவட்ட மாநாட்டை, 2018 ஆகஸ்டில் நடத்துவதுற்கு ஏதுவாக, வழிகாட்டும் குழு உருவாக்கப்பட்டுள்ளது. தோழர் K .M .புவனேஸ்வரி, JE, திருச்செங்கோடு கன்வீனராகவும், தோழர் L . வனிதா, JE இணை கன்வீனராகவும் செயல்படுவார்கள். பகுதி வாரியாக 7 தோழியர்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
BSNL WWCC தமிழ் மாநில மாநாட்டிற்கு திரளாக தோழர்கள் பங்கேற்க செய்வது, மாவட்ட அமைப்பு மாநாட்டை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்