11.07.2018, மாலை 04.30 மணி, MAIN தொலைபேசி நிலையம், சேலம்
26/06/2018 அன்று டெல்லியில், AUAB கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், 24.02.2018 அன்று மத்திய தொலை தொடர்பு அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகளின் தற்போதைய நிலை பரிசீலிக்கப்பட்டது.
ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதியப்பங்களிப்பு, BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட அமைச்சரின் உறுதி மொழிகள் மீது போதிய முன்னேற்றங்கள் இல்லாத காரணத்தால், போராட்ட களம் காண, AUAB முடிவு செய்து, அதற்கான பிரகடனத்தை வெளியிட்டது.
முதல் கட்ட போராட்டமாக, 2018 ஜூலை 11 அன்று CORPORATE அலுவலகம், மாநிலத்தலைநகர்களில் அமைந்துள்ள CCA அலுவலகங்கள், மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
அதன்படி, நமது சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு சார்பாக 11.07.2018 அன்று மாலை 04.30 மணி அளவில், சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கோரிக்கைகள்
ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்!
2. 01/01/2017 முதல் ஓய்வு பெற்ற BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் செய்!
3. மத்திய அரசின் விதிகளின்படி BSNLலில்
ஓய்வூதியப்பங்களிப்பு
நடைமுறைப்படுத்து!
4. BSNL நிறுவனத்திற்கு உடனடியாக, 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்!
தோழர்களே! நமது கோரிக்கைகளை வென்றெடுக்க, ஒன்றுபட்டு ஆர்ப்பரிப்போம், வெற்றிபெறுவோம்!!.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்