26/06/2018 அன்று டெல்லியில் AUAB கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, AIGETOA, BSNLMS, TEPU உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள்/பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
24.02.2018 அன்று மத்திய தொலை தொடர்பு அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகளின் தற்போதைய நிலை பரிசீலிக்கப்பட்டது. ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதியப்பங்களிப்பு, BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட அமைச்சரின் உறுதி மொழிகள் மீது போதிய முன்னேற்றங்கள் இல்லாத காரணத்தால், கீழ்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்த AUAB முடிவு செய்துள்ளது.
* 2018 ஜூலை 11 அன்று CORPORATE அலுவலகம், மாநிலத்தலைநகர்களில் அமைந்துள்ள CCA அலுவலகங்கள், மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்.
* 2018 ஜூலை 24,25,26 ஆகிய தேதிகளில்
தலைநகர் டெல்லி, மாநில தலைநகரங்கள், மற்றும்
மாவட்டத்தலைநகரங்களில் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம்.
நிதி நெருக்கடியை காரணம் காட்டி, ஊழியர்களுக்கு சலுகைகள் குறைத்து, சம்பள தேதியை கூட மாற்றும் செய்யும் BSNL நிர்வாகம், உயர் மட்ட அதிகாரிகளை சிக்கன நடவடிக்கையில் ஈடுபட அறிவுறுத்தாமல் ஊதாரி செலவு செய்து வருவதை கூட்டம் கண்டித்தது. இது சம்மந்தமாக CMD க்கு கடிதம் எழுதவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தோழர்களே! 11.07.2018 ஆர்ப்பாட்டம் மற்றும் 24.07.2018 முதல் 26.07.2018 மூன்று நாள் தொடர் உண்ணாவிரதம் ஆகிய போராட்டங்களை நமது மாவட்டத்தில் வெற்றி கரமாக்குவோம்!. உரிமைகளை மீட்டெடுப்போம்!!.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்