Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, May 13, 2018

தெரு முனை பிரச்சாரம் - நெஞ்சுநிறை நன்றி !

Image result for நன்றி


துணை டவர் அமைக்கும் மத்திய அரசின் நாசகர முயற்சியை கண்டித்து, 07.05.2018 முதல் 11.05.2018 வரை ஐந்து நாட்கள், நாடு முழுவதும்  தெரு முனை பிரச்சார கூட்டங்கள் நடத்தி, மாபெரும் "மக்கள் சந்திப்பு இயக்கம்" நடத்த AUAB கூட்டமைப்பு அறைகூவல் கொடுத்திருந்தது. 

அதன்படி, நமது மாவட்டத்தில், இயக்கத்தை வெற்றிகரமாக்க  BSNLEU, SNEA, AIBSNLEA, FNTO மாவட்ட சங்கங்கள் கூடி விவாதித்து, 5 நாட்களில் 16 மையங்களில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இரண்டு குழுக்களாக பிரிந்து இயக்கம் நடத்த திட்டமிட்டோம். முதல் இரண்டு நாட்கள், சேலம் நகர பகுதிகளிலும், அடுத்த மூன்று நாட்கள் ஊரக பகுதிகளிலும் நடத்த ஏற்பாடு செய்தோம். முறையாக காவல் துறையிடம் அனுமதியும் பெற்றோம். 

மக்களுக்கு விநியோகிக்க 10,000 நோட்டிஸ்கள் அச்சிட்டோம். நமது முயற்சியின் பலனாக, 5 நாட்களும் பிரச்சார இயக்கம் சிறப்பாக நடைபெற்றது. 16 மையங்கள் 22 மையங்களாக, அதிகரித்தது. அனைத்து சங்க தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டது நல்ல அம்சம். அனைவருக்கும் AUAB கூட்டமைப்பு சார்பாக நன்றி கலந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள். 

நமது BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகள், முன்னனி தோழர்கள், சிறப்பாக களப்  பணியாற்றினார்கள். கிளைகளில், இயக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தோழர்கள் உற்சாகமாக கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் செவ்வணக்கங்கள். இதற்கெல்லாம் மேலாக, ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள்  இயக்கத்தில் கலந்து கொண்டது போற்றுதலுக்குரியது, பாராட்டுக்குரியது. 

கடுமையான கத்திரி வெயிலையும் பொருட்படுத்தாமல் ஐந்து நாட்களில் நமது பிரச்சாரக்குழு மேற்கொண்ட பயணம் பாராட்டுக்குரியது. 16 மையங்களில் அனுமதி பெற்றுவிட்டு, திடிரென்று கூடுதல் மையங்களில் நடத்த காவல் துறையை அணுகியபோது, நமது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து உடனடியாக அனுமதி வழங்கிய காவல் துறைக்கு நன்றி. 

இயக்கம் வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் நமது நெஞ்சு நிறை நன்றிகள். 

வாழ்த்துக்களுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர்