கடந்த 27.04.2018 அன்று DoT, BSNL ஊழியர்களுக்கு செய்யப்படவேண்டிய ஊதிய மாற்றம் சம்மந்தமாக ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சம் என்னவென்றால், BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்ய அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் பேச்சு வார்த்தை துவங்க, DoT சம்மதம் தெரிவித்துள்ளது. இது ஒரு வரவேற்கப்படவேண்டிய விஷயம் என்றாலும், பல தடைகள் இன்னும் உள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் என்பது ஒரு பிரதான விஷயம். 24.02.2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர், தொழிற் சங்க தலைவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், நமக்கு சாதகமாக பரிந்துரைப்பதாக உறுதி அளித்துள்ளார். அமைச்சரின் உறுதி மொழியை செயலாக்க, DoT தனது வேலையை துவக்கிய செயல் தான் இந்த கடிதம். ஊதிய மாற்ற முயற்சிகளில் இது ஒரு சிறு முன்னேற்றம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
DoT கடிதம் காண இங்கே சொடுக்கவும்