ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் ஆரிபா – உ.பி. மாநிலத்தில் 17 வயது மாணவி உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, 18-04-2018 அன்று மாநிலம் முழுவதும் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த, நமது தமிழ் மாநில சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, நமது மாவட்டத்தில், 18.04.2018 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு, குழந்தை ஆசிபா பதாகையுடன், கைகளில் மெழுகு வர்த்தி ஏந்தி, மாவட்டம் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் P . தங்கராஜு, மாவட்ட பொருளர் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் துவக்கவுரை வழங்கினார். TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர்
M. செல்வம், கண்டன உரை வழங்கினார். தோழர் S . தமிழ்மணி, தமிழ் மாநில உதவி தலைவர் கண்டன சிறப்புரை வழங்கினார்.
திரளாக தோழர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தை, தோழர்
P . குமாரசாமி, மாவட்ட உதவி தலைவர் நன்றி கூறி முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்