Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, January 25, 2018

சிறைகள் நிரம்பட்டும்!

Image result for முற்றுகை


2014 மே 26 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மோடியைபிரதமராக கொண்டு ஆட்சி பொறுப்பேற்றது. 43 மாத மோடி ஆட்சியால் பாதிக்கப்படாத பிரிவினரே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாயைத் திறந்தால் வளர்ச்சி விகிதம் கூடுகிறது என கிளிப்பிள்ளை போல் பேசுகிறார் மோடி. ஏழை மக்களின் மகிழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத இந்த வளர்ச்சியால் பேரானந்தப்படுவோர் பெருமுதலாளிகளே.

43 மாதத்தில் வெறும் 1லட்சம் வேலைவாய்ப்பு

விவசாயம்-நிதித்துறை-சேவைத் துறைகள் அனைத்தும்பன்னாட்டு நிறுவனங்கள் பிடியில் சிக்கி அழிந்து வருகிறது. வேலைவாய்ப்புகளை பெருக்கவே சட்டங்கள் என்றிருந்த நிலை மாறி வேலை வாய்ப்பை சுருக்கவும், இருக்கும்வேலைகளைப் பறிக்கவும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மோடி அரசின் நவீன தாராளமய கொள்கையின் விளைவாக, 2016 நவம்பர் 8 பணமதிப்பு நீக்கம், 2017ஜூலை முதல் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். 13லட்சத்து 70 ஆயிரம் தொழிற்சாலைகளில் 19 சதவீதஆலைகள் இப்போது மூடி கிடக்கின்றன. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை என்று பீற்றிக் கொண்ட மோடிஇந்த 43 மாதங்களில் 1 லட்சத்து 34 ஆயிரம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியுள்ளார். இந்திய நாட்டில் இன்று வேலையில்லா பட்டாளத்தின் எண்ணிக்கைஉலகின் பல நாட்டு மக்கள் தொகையை காட்டிலும் அதிகம்.கடந்த 50 ஆண்டுகளாக உழைப்பால்-ஆராய்ச்சியால்-இந்திய மக்களின் வரிப்பணத்தால் -கட்டணத்தால் உருவாக்கப்பட்டு, உலக நாடுகளின் முன் வரிசையில் நம்மை நிறுத்தியுள்ள நமது பொதுத்துறையை - இந்தியமக்களின் 125 கோடி பேரின் மகத்தான சொத்தை பன்னாட்டுக் கம்பெனிகளும்-இந்நாட்டு முதலாளிகளும் பங்குப் போட்டுக் கொள்ள கதவை திறக்கிறது மோடி அரசு.நாட்டின் நிதியாதாரத்திற்கு அடிப்படையாக விளங்கும் வங்கிகளும்-இன்சூரன்சும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

கேந்திரமான பொதுத்துறைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது அல்லது சீர் குலைக்கப்படுகிறது. மின்சாரம், தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து, துறைமுகம் மட்டுமல்லாது இந்தநாட்டின் கேந்திரமான பாதுகாப்பு துறைகளும் இந்த ஆபத்துக்கு தப்பவில்லை. உலக நாடுகளில் தலைசிறந்த ஒன்று நமது ரயில்வே.நம் நாட்டு பொருளாதாரத்தின் நரம்பு மண்டலமான அந்த ரயில்வேயை கம்பெனிகளாக கூறுபோட்டு அதில் தனியாரை புகுத்த முயற்சி நடக்கிறது.ஒரு நாட்டுப் பொருளாதாரத்தின் உயிர் நாடியே அதன்நிதி நிறுவனங்கள் தான். நமது வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் உலகில் ஒப்பற்றவை. இவை அரசுநிறுவனங்களாக இருப்பதால் மக்களுக்கு தேவைக்கேற்ப நலவாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. இன்று இந்த நிறுவனங்களை தனியாருக்கு -பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்க துடிப்பது நமது பொருளாதாரத்தின் நாடித் துடிப்பையே நிறுத்தும் முயற்சியாகும்.

உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற காரணமாக இருந்தது விவசாயம். அதற்கு காரணம்:

1. குறைந்த கட்டணத்தில் கிடைத்த மின்சாரம்;

2. மானிய விலையில் வழங்கப்பட்ட உரம்;

3. மிகவும் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக கிடைத்த தண்ணீர்.

இந்த மூன்றுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. விடுதலைக்குப் பிறகு 55 சதவீதம் இருந்த விவசாய உற்பத்திசீரழிந்த பொருளாதார கொள்கையின் காரணமாக வெறும்13 சதவீதம் அளவுக்கு சுருங்கிவிட்டது.உரம்-மற்றும் இடுபொருட்களுக்கான மானியங்கள் வெட்டப்படுவதால் சிறிய நடுத்தர விவசாயிகள் தாங்க முடியாத துயரத்திற்கு ஆழ்த்தப்பட்டுள்ளனர். விவசாய விளை நிலத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. உணவு தானிய உற்பத்தியும் படுபாதாளத்திற்கு சென்று விட்டது. விவசாயம் கட்டுப்படியாகவில்லை என்று நிலத்தை கறம்பாகப் போடும் பரிதாப நிலையில் தான் விவசாயிகள் உள்ளனர்.தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு கடன்பட்டு விவசாயமும் பொய்த்துப் போனதால் கடன் கட்ட வழியின்றி கயிற்றில் தொங்கிய விவசாயிகள் எண்ணிக்கை இதுவரை 2 லட்சத்தை நெருங்குகிறது.இதைவிடபேரழிவு ஒரு அரசிற்குவேறு எதுவும் இல்லை. இது மோசமான அபாயத்தின் அறிகுறி.

விலையேற்றம்

அநியாயமான விலையேற்றம் அதுவும் அத்தியாவசியப் பண்டங்களுக்கு ஏற்படுத்துகிற கொடிய விளைவுகளை ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு வயதினரும் அனுபவித்து வருகின்றனர். வருமானத்தின் பெரும்பகுதியை உணவுச் செலவும், உயரும் விலையும் அரித்து விடுகின்றன. வாடகையும் இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டது. நகரங்களில் வாடகைக்கு குடியிருந்து கொண்டு ஒருதொழிலாளியால் வாழ்க்கை நடத்த முடியாது. மருத்துவசெலவு, கல்விச் செலவு, தண்ணீர் செலவு என எல்லாமேகூடிவிட்டது. வணிக வசதி ஒப்பந்தத்தில் அன்றைய வர்த்தகதுறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கையெழுத்திட்டதன் காரணமாக நியாய விலைக் கடையில் மானிய விலையில்வழங்கப்பட்டு வந்த சர்க்கரையின் விலை கூட கடுமையாகஉயர்த்தப்பட்டுள்ளதோடு, உணவுப் பொருட்கள் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலை வெகுவாக குறைந்தும் கூட பெட்ரோல்-டீசல் விலை உச்சத்தில் உள்ளது. இதனால் அனைத்துப்பொருட்களும் தாறுமாறாக உயர்ந்து மக்களின் வாழ்க்கையை ஆட்டம் காண செய்துள்ளது.அரசு தனது அடிப்படைபொறுப்புகளில் இருந்து விலகிக் கொண்டே வருகிறது

தொழிலாளர் சட்டங்களை திருத்தாதே!

தொழிலாளர் சட்ட அமலாக்கப் பிரிவின் முனைப்பான ஆதரவுடன் முதலாளிகள் தொழிலாளர் சட்டங்களை மீறுவதும், லாபம் பெருக்குவதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உற்பத்திச் செலவை குறைக்க முதலாளிகள் கையாளும் ஒரே வழி தொழிலாளர்களை குறிவைப்பது தான். மோடிஅரசாங்கம் முதலாளிகளுக்கு ஆதரவாக 44 தொழிலாளர்நலச் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்ற முனைகிறது. சம்பள பட்டுவாடா சட்டம், குறைந்தபட்ச ஊதியசட்டம், சமவேலைக்கு சம ஊதிய சட்டம், பிரசவகால பயன்சட்டம் உட்பட பல சட்டங்களின் பலன்கள் பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது. இத்தகையசட்டப்பூர்வமான பலன்கள் முதலாளிகள் அளிக்கும் யாசகம் அல்ல. தொழிலாளி வர்க்கம் பல தியாகங்கள் செய்துபோராடிப்பெற்ற உரிமைகளாகும்.8 மணி நேர வேலை உரிமையை நிலைநிறுத்திய மே தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் 10-12 மணி நேரம் வேலை நேரம் என்பது மாமூலாகி வருகிறது.

சமூகப் பாதுகாப்பு

93 சதவீதமாக உள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்துவதாக இல்லை. குறிப்பிட்ட வேலை நேரம், குறைந்த பட்ச ஊதியம், சமூகபாதுகாப்பு பயன்கள் கிடைப்பதில்லை. இவர்கள் தான் நாட்டின் 60 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை தருகின்றனர்.பொருளாதாரத்தின் அனைத்து துறையிலும் நிரந்தர தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துவருகிறது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் அரசு இருந்த காலத்தில் முறைசாரா துறை நிறுவனங்கள் குறித்த தேசியகமிஷன் அமைக்கப்பட்டது. தேசிய சமூக பாதுகாப்பு நிதியம்ஏற்படுத்த வேண்டும் என கமிஷன் பரிந்துரை வழங்கியது.வறுமைக் கோடு பாராமல் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது. அகிலஇந்திய சட்டத்தின் கீழ் அரசு அமைத்த முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு வாரியமும் இந்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது. பென்சன், இயற்கை,விபத்து மரணநிவாரணம், பிரசவ பயன்கள் உட்பட மருத்துவ சிகிச்சைபோன்ற குறைந்த பட்ச சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்க வேண்டும் எனவும் வாரியம் தீர்மானித்தது. மோடி அரசு, இந்தப் பரிந்துரைகளை அமலாக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.பொது போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்பட்டு, போக்குவரத்து முழுவதையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கத் துடிக்கிறது.அனைவருக்கும் கல்வி என்கிற கொள்கை போய் பணம் படைத்தோர்க்கே உயர் கல்வி என்றாகிவிட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் மூக்கை நீட்டியதால் நமதுபாரம்பரியமும்-கலாச்சாரமும் சீரழிகின்றன. வன்முறை-குற்றங்கள்-மதவெறி ஆகியவற்றை மையப்படுத்தி தொலைக்காட்சி ஒளிபரப்புகள் அமைவதால் நாட்டின் தலைமுறையேபாழாகிறது. இந்த கலாச்சார சீரழிவுக்கு எதிரான போராட்டத்தையும் தொழிற்சங்கம் நடத்த வேண்டியுள்ளது.மத்திய அரசின் இந்த அக்கிரமங்களை எதிர்க்கத்தான், இந்திய மக்கள் மீது ஏவிவிடப்பட்ட இந்த பானங்களை தடுக்கத்தான் ஜனவரி 25 மறியல் போராட்டம்.2016 நவம்பர் 8-10 ஆகிய மூன்று நாட்கள் 72 மணிநேரம் தொடர் பெருந்திரள் தர்ணா (மகாபடாவ்) தலைநகர்தில்லியில் 3லட்சம் பேர் பங்கேற்புடன் பிரம்மாண்டமாய் நடந்து முடிந்தது. போராட்ட முடிவிற்கு பிறகு கூடிய அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும் மேற்கண்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி, அந்தந்தமாநிலத் தன்மைக்கு ஏற்ப போராட்ட வடிவங்களை தீர்மானித்துக் கொள்ள வேண்டுகோள் விடப்பட்டது. வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் ஜனவரி 25 அன்று சிறைகளை நிரப்புவோம் என்று முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள்

1. வேலையின்மையை கட்டுப்படுத்தி வேலை

வாய்ப்பை உருவாக்கு!

2. தொழிலாளர் சட்டங்களை முழுமையாக அமல்

படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடு!

3. அனைவருக்குமான சமூக பாதுகாப்பை உத்தர

வாதப்படுத்து!

4. குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 வழங்கு!

5. குறைந்தபட்ச மாத பென்சன் ரூ. 3000 வழங்கு!

6. சமவேலைக்கு சமஊதியம் வழங்கிடவேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கறாராக அமலாக்கு!

7. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை

வார்க்காதே!

8. பி.எப், போனஸ் போன்ற சமூகபாதுகாப்பு திட்டங்க

ளில் உள்ள உச்சவரம்பினை நீக்கிடுக; பணிக்கொடை தொகையினை உயர்த்திடு!

9. 45 நாட்களுக்குள் தொழிற்சங்க பதிவினை முடித்திட

வேண்டும்,ஐஎல்ஓ பரிந்துரைகளை சி-87 மற்றும் சி-98ஐ அங்கீகரித்து அமலாக்கு!

10.தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டதிருத்தங்

களை கைவிடு!

11.பாதுகாப்பு துறை, இரயில்வே, காப்பீடு துறைகளில் அந்திய முதலீட்டை அனுமதிக்காதே!

12.மோட்டார் வாகன சட்டத்தை திருத்துவதை கைவிடுக

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியாவின் மத்தியதொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, தொமுச உள்ளிட்ட சங்கங்களும் துறைவாரி சம்மேளனங்களும் இணைந்து நடத்தும் மறியல் போர்.ஜனவரி 25 தொழிற்சங்க வரலாற்றில் இன்னொரு எழுச்சி நாள்.கட்டுரையாளர்: உதவி பொதுச் செயலாளர், சிஐடியு தமிழ்மாநிலக்குழு.

Image result for theekkathir