Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, November 15, 2017

அனைத்து சங்க கூட்ட முடிவுகள்


14/11/2017 அன்று All Unions & Associations of BSNL அமைப்பின் கூட்டம், புதுடில்லியில் நடைபெற்றது.  NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, AIGETOA, FNTO, SEWABSNL, BSNLMS, AIBSNLOA, BSNLATM, BSNLOA மற்றும் BEA சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

16/11/2017 அன்று நடக்கவிருந்த மனிதச்சங்கிலி இயக்கத்தை 23/11/2017 அன்று கூடுதல் பங்கேற்புடன் நடத்துவது.

23/11/2017 அன்று BSNL நிர்வாகத்திற்கும், DOTக்கும் டிசம்பர் 12 மற்றும் 13 வேலைநிறுத்த அறிவிப்பு செய்வது.

18/11/2017 அன்று மாநில மட்டத்தில் அனைத்து சங்க கூட்டம் நடத்தப்பட்டு மனிதச்சங்கிலி இயக்கத்தையும் வேலைநிறுத்தத்தையும் திறம்பட நடத்துவது பற்றி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். 

30/11/2017க்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை மனு அளிக்கப்படவேண்டும். கோரிக்கை மனுவின் மாதிரி இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும்.

அகில இந்தியத்தலைமையில் இருந்து சுவரொட்டி மற்றும் சுற்றறிக்கைகள்  வெளியிடப்படும். பிராந்திய மொழியிலும் வெளியிடப்படவேண்டும். 

அனைத்து அகில இந்தியத்தலைவர்களும் பங்கேற்கும் வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் நாடு முழுவதும் நடைபெறும். 

20/11/2017 லக்னோவில் துவங்கி, பாட்னா, கொல்கத்தா, பூணா, அஹமதாபாத், கௌஹாத்தி, லூதியானா, ஜெய்ப்பூர், புவனேஸ்வர், சென்னை, பெங்களூரு போபால் மற்றும் ஹைதராபாத் நகரில்  08/12/2017 அன்று நிறைவுபெறும்.
சென்னையில் 05/12/2017 அன்று நடைபெறும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்