Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, October 9, 2017

ஒப்பந்த ஊழியர் பிரச்சனை - BSNLEU பேச்சு வார்த்தையும், உத்தரவும்


Image result for bsnl contract workers


ஒப்பந்த ஊழியர் பிரச்சனை சம்பந்தமாக 03-10-2017 அன்று, தமிழ் மாநில நிர்வாகத்துடன் நமது மாநில சங்கம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், மாநில நிர்வாகம் புதிய வழிகாட்டுதல் உத்தரவை  வெளியிட்டுள்ளது. 

ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் சம்மந்தமாக, மாநிலம் தழுவிய போராட்டத்திற்க்கு நமது BSNLEU - TNTCWU சங்கங்கள் அறைகூவல் கொடுத்தது. போராட்ட அறிவிப்பை யொட்டி, நமது சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மாநில நிர்வாகம்,  04/10/2017 அன்று, ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பந்தமாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த புதிய வழிகாட்டுதல் உத்தரவை வெளியிட்டுள்ளது. 

அந்த உத்தரவின் முக்கிய சாரம்சங்கள்:

Employees Provident Fund and Misc Provisions Act 1952, 
Employees State Insurance Act 1948, 
Contract Labour Regulation and Abolision Act 1970, 
Payment of Wages Act 1936, Minimum Wages Act 1948 
ஆகிய சட்டங்கள் கட்டாயமாக மாவட்டங்களில் பின்பற்ற வேண்டும். 

* பிரதி மாதம் 7 ஆம் தேதி சம்பளம் உத்தரவாதம் செய்ய வேண்டும். அதற்கான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும்

* Wage Slip, Identity Card, Universal Account Number ஆகியவற்றை ஒப்பந்ததாரர் வழங்க வேண்டும்.

* 20/05/2009 லிருந்தும் 19/01/2017 லிருந்தும் சம்பள நிலுவை வழங்க வேண்டும்.  

போனஸ் வழங்க வேண்டியது ஒப்பந்ததா ரர் கடமை. சட்டபூர்வ போனஸை வழங்கும்படி ஒப்பந்ததாரருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் ( தற்போது சட்டபூர்வ போனஸ் ரூ. 7000)

ஒவ்வொரு மாவட்டத்திலும் DGM  அந்தஸ்துக்கு குறைவில்லாத ஒரு அதிகாரியை  NODAL OFFICER  ஆக நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்ததாரருடைய  பில்களை குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப வேண்டியது அவருடைய கடமை.


தோழர்களே! 

போராட்டமில்லாமல் யாராட்டமும் செல்லாது என்பதுபோல், நம்முடைய தொடர்ச்சியான, போராட்டமே இன்று ஒப்பந்த ஊழியர் வாழ்வில், சிறு முன்னேற்றத்தை உத்தரவாத படுத்தியுள்ளது. 

போராட்ட பதாகையை என்றும் உயர்த்தி பிடிப்போம்!

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்