26.09.2017 அன்று டில்லியில், 3வது ஊதிய மாற்றம் மற்றும் துணை டவர் அமைக்கும் முயற்சி, சம்மந்தமாக விவாதிக்க, அனைத்து சங்க கூட்டம், NFTEBSNL சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், BSNLEU, NFTEBSNL , SNEA, AIBSNLEA, AIGETOA, BTEU, SEWA BSNL, BSNLMS, BSNLOA, மற்றும் TOA(BSNL) சங்க தலைவர்கள்/பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இரண்டு கோரிக்கைகள்/பிரச்சனைகள் சம்மந்தமாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. சிறப்பான ஊதிய மாற்றம் பெறவும், துணை டவர் அமைக்கும் முயற்சியை தடுக்கவும், ஒன்றுபட்ட, சக்திமிக்க போராட்டம், "ஒரே கொடையின் கீழ்" நடத்துவது சிறப்பாக இருக்கும் என பெரும்பாலான சங்கங்கள் முன்மொழிந்தன.
முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அடுத்த கூட்டம் 04.10.2017 அன்று நடைபெறும். அதில், இறுதி முடிவு எடுக்கப்படும்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்