Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, April 3, 2017

ஏப். 25 முதல் தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்



அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்றா விட்டால், ஏப். 25 முதல், தமிழகம் முழுவதும் நான்கரை லட்சம் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மு.அன்பரசு கூறினார். நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போதுஅவர் கூறியதாவது:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டங்களில் 110 விதியின் கீழ், அரசு ஊழியர்களுக்கான 11 அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் காலத்திலும் அவை நிறைவேற்றப்படவில்லை; அவருக்குப் பின் பொறுப்பேற்ற முதல்வர்களும் எதுவும் இதுவரை செய்யவில்லை.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவின் புதிய ஊதிய விகி தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மாதங்கள் கடந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு வாய்மூடி மெளனமாக இருப்பதை அரசு ஊழியர்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டுப் பழைய முறையையே செயல்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. இதற்காகப் பெயரளவில் போடப்பட்ட வல்லுநர் குழு 4 முறைகூடிக் கலைந்ததுதான் மிச்சம். எந்தஆக்கப் பூர்வமான ஆலோசனை களைக் கூட அவர்கள் அறிவிக்க வில்லை.

தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம்

தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் போன்று 3.5 லட்சம் ஊழியர்கள் கடந்த 30 ஆண்டுகளாகத் தற்காலிக ஊழியர்களாகவே பணியாற்றி வருகிறார்கள். இன்னும் மதிப்பூதியம், தொகுப்பூதியம், ஒப்பந்த முறையிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கி அனைத்து ஊழியர்களையும் நிரந்தர அரசு ஊழியர்களாக்க வேண்டும்.அரசு ஊழியர்களுக்கான புதியஊதிய விகிதங்களையும் அவற்றிற் கான புதிய பலன்களையும் பழையஓய்வூதிய முறையையும் நடை முறைப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான அறிவிப்புகளைத் தற்போதைய அரசு அறிவிக்க வேண்டும். சங்க நிர்வாகிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்திக் குறைபாடில்லாமல் கோரிக்கைகளை ஏற்றிட வேண்டும். ஊதியக்குழுப் பலன்கள் நடைமுறைக்கு வரும் வரை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 20 சதவீத நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.அவ்வாறு நடைபெறாவிட்டால், இம்மாதம் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 60 துறைகளைச் சேர்ந்த 4.5 லட்சம் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்வார்கள்.

போராட்ட ஆயத்த கூட்டங்களும் மாநாடும்


இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்காக, ஏப். 8 அன்று, அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் போராட்ட ஆயத்தக் கூட்டங்கள் நடைபெறும். ஏப்.15 அன்று, திருச்சி மாநகரில் பல்லாயிரக்கணக்கில் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் போராட்ட ஆயத்த மாநாடு எழுச்சியோடு நடைபெறும். இவ்வாறு மு.அன்பரசு தெரிவித்தார்.பேட்டியின் போது, அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலா ளர் எம்.செளந்தரராஜன், மாவட்டச்செயலாளர் ஏ.டி.அன்பழகன், மாவட்டத் தலைவர் ப.அந்துவன் சேரல், நகராட்சி நிர்வாக ஆணையரக அனைத்து ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கி.ரகுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Image result for theekkathir