நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவு கிராம வங்கிகளில் பணிபுரியும் 10 லட்சம் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் செவ்வாயன்று (28.2.2017) மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கையை எதிர்த்து வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 1,15,000 கிளைகளில் வங்கிப் பணிகள்ஸ்தம்பித்தன. நாடெங்கிலும் 5 லட்சத்திற் கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் 600 மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.
மத்திய அரசாங்கம் தனது கொள்கைஅறிவிப்பாக பட்ஜெட் உரையில் “தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக மாற்றுவோம்” என்று அறிவித்துள்ளது. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 5 தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான வேலை நிறுத்த உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கக்கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசாங்கம் தீவிரமாக உள்ளது.மத்திய அரசாங்கம் ஒருபுறம் பொதுத்துறை வங்கிகளை நலிவடையச் செய்கிறது; மறுபுறம் போட்டி என்ற பெயரில் புதிய தனியார் வங்கிகளை ஊக்குவிக்கும் செயலிலும் ஈடுபடுகிறது.
மத்திய அரசின் இந்த முயற்சி வெற்றி பெறுமானால் சாதாரண மக்களுக்கான வங்கிச் சேவையும், கடன் வசதியும் பெருமளவில் பாதிக்கப் படும். பொதுத்துறை வங்கிகள் உட்படஅனைத்து வங்கிகளும் பணக்காரர்களுக்காக சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்றப்படக்கூடிய ஆபத்து உள் ளது.பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 6 லட்சம் கோடி ரூபாய் வராக் கடனாக உள்ளது. மேலும் 3 லட்சம் கோடி ரூபாய் வராக் கடனாக மாறக்கூடிய ஆபத்து உள்ளது. இதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடன்கள் அதாவது 6 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, திரும்பி வராத கடன்களாகும். இதனை வசூல் செய்ய மத்திய அரசாங்கம் எந்தவிதமான சட்டத் திருத்தம் கொண்டு வரவும் தயாராக இல்லை.
இக்கடன்களை சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களுக்கு விற்றோ அல்லது புதியதாக பேட் பேங்க் துவக்கியோ அவற்றைரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.கிராம வங்கிகளை தனியார்மயமாக்கி அவற்றின் நோக்கத்தை சிதைக்கும் முயற்சியிலும், கூட்டுறவு வங்கிகளை பலவீனப்படுத்தி அவற்றை செயல் படாமல் செய்வதற்கான முயற்சியிலும், 30,000 பிரதம வேளாண் கூட்டுறவு சங்கங்களை மூடக்கூடிய முயற்சியிலும் மத்திய அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
இதன் காரணமாக கிராமப்புற ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இதுவரை கிடைத்து வரும் சலுகை வட்டியிலான கடன் பெரிதளவு பாதிக்கப்படும்.செல்லா நோட்டு பிரச்சனையின் காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கோ, அதன் காரணமாக உயிரிழந்த பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கோ பட் ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லை.
அந்த காலகட்டத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்று இரவு பகலாக பணி செய்த வங்கி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் அதற்கான கூடுதல் ஈட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை.மத்திய அரசு, வங்கி நிர்வாகங்களின் இத்தகைய மக்கள் விரோத, ஊழியர் விரோத போக்கை கண்டித்து வேலைநிறுத்தம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது.