Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 2, 2017

நாமக்கல் கிளை கூட்டம்




நாமக்கல் நகர மற்றும் ஊரக கிளைகளின் இணைந்த கிளை கூட்டம், நாமக்கல்லில் 01.03.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. கிளைத்தலைவர்கள் தோழர்கள் செல்வராஜ்(நகரம்), ரவிமணி (ஊரகம்) கூட்டு தலைமை தாங்கினர். 

நகர கிளை செயலர் தோழர் பாலசுப்ரமணியம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், துவக்க உரை வழங்கினார். மாவட்ட உதவி தலைவர் தோழர் P . கனகராஜ், மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், மாவட்ட உதவி செயலர் தோழர் S . ராமசாமி, மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P . செல்வம், TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . 

மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார்.  ஊரக கிளை செயலர் தோழர் சின்னசாமி நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். கூட்டத்தில் சுமார் 40 தோழர்கள் பங்குபெற்றனர். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்