நமது மத்திய சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாடு, 03.01.2017 அன்று நிறைவு பெற்றது. இரண்டாம் நாள் துவங்கிய சார்பாளர் விவாதம் இறுதி நாளான 03.01.2017 அன்று நிறைவு பெற்றது. விவாதத்திற்கு பதில் அளித்து பொது செயலர் உரை நிகழ்த்திய பின், செயல்பட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை ஏகமனதாக ஏற்கப்பட்டது.
துணை நிறுவனம் அமைக்கும் முயற்சியை கடுமையாக எதிர்ப்பது, நிர்வாக சூழ்ச்சியை முறியடித்து 01.01.2017 முதல் நிறைவான ஊதிய மாற்றம் பெற போராடுவது, தேங்கியுள்ள ஊழியர் பிரச்சனைகளை தீர்வு காண போராட்ட களம் காண்பது, மத நல்லிணக்கம், செல்லாத நோட்டு பிரச்சனை, ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டது.
தோழர்கள் பல்பீர் சிங், அபிமன்யூ,ஸ்வபன் சக்கரவர்த்தி முறையை தலைவர், செயலர், துணை செயலராக மீண்டும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தோழர் கோகுல் போரா (அசாம்) பொருளராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.
நமது மாநில தோழர், பொது செயலராகவும், நமது மாநில தலைவர், அகில இந்திய உதவி பொது செயலராகவும் மீண்டும் தேர்ந்தெடுக்க பட்டுள்ளது, நமது மாநிலத்திற்கு பெருமை.
தோழர் V.A.N.நம்பூதிரி அவர்களை மத்திய சங்கம் கௌரவப்படுத்தியது.
தோழர் பல் பீர் சிங் நன்றி கூறி கோஷங்களுக்கிடையே மாநாட்டை நிறைவு செய்தார்.
ஆழமான விவாதங்கள், நான்கு நாட்களும் அரங்கு நிறைந்த சூழல், விசாலமான அரங்கம், நல்ல உணவு, முறையான ஏற்பாடுகள் என இந்த 8வது மாநாடு புதிய சரித்திரம் படைத்துள்ளதாக மத்திய சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
புதிய நிர்வாகிகள் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்