ஒடுக்கப்பட்டோர்க்கு ஒலித்த பறை நின்றது
BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்
இன்குலாப் ஜிந்தாபாத்...
தொழிலாளர்களின் வேத மந்திரம்...
அதனையே தனது பெயராகக் கொண்டவர்...
ஒடுக்கப்பட்ட மக்களின் பிறப்பிடம்...
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்த...
பேராசிரியர் தோழர். சாகுல் ஹமீது...
மக்கள் கவிஞர் எனப் பெயர் பெற்ற தோழர்.இன்குலாப்...
நேற்று, 01/12/2016 உடல் நலக்குறைவால்...
மண்ணுலகை விட்டு மரித்தார்...
மனுசங்கடா... நாங்க மனுசங்கடா...
உன்னைப்போல... அவனைப்போல...
எட்டு சாணு... உயரமுள்ள மனுசங்கடா...
என்ற அவரது உணர்ச்சிமிகு பாடல்...
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை கீதமாக
என்றென்றும் ஒலிக்கும்...
மக்கள் கவிஞர் இன்குலாப் மறைவிற்கு
நமது ஆழ்ந்த இரங்கல், கண்ணீர் அஞ்சலி...
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்