8வது மாவட்ட மாநாட்டில் நடைபெற்ற சேவை கருத்தரங்கில், PGM உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சிரமங்களை மனதில் வைத்து, நவம்பர் 2016 சம்பளம், ஊழியர்களுக்கு ரொக்கமாக வழங்க வேண்டும் என நாம் கோரியிருந்தோம்.
நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, இன்று, 21.11.2016, மாவட்ட நிர்வாகம் ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து NE ஊழியர்களுக்கும் சம்பள முன்பணம் ரூ. 10,000 ரொக்கமாக வழங்கப்படும். சம்பள முன்பணம் வேண்டாம் என்று விரும்பும் ஊழியர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட சம்பளப் பட்டுவாடா அதிகாரியிடம் தங்களது விருப்பத்தை எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும்.
உத்தரவு வெளியிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றிகள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
விருப்ப விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்