நமது BSNL-லில் துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து, 27.10.2016 FORUMத்தின் ஆர்ப்பாட்ட அறைகூவலை வெற்றிகர மாக்கினோம்.
BSNL நிறுவனத்தின், 65000 செல்கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் துவங்கத் துடிக்கும் மத்திய அரசின் தவறான கொள்கையை எதிர்த்தும், BSNL நிறுவனத்தைக் கூறு போடுவதால், விளையும் ஊறுகள் குறித்து விவாதிக்கவும், நாடு தழுவிய அடுத்த கட்டப் போராட்டம் பற்றி முடிவுகள் எடுக்கவும், BSNLEU - NFTE சங்கங்கள் இணைந்து அனைத்து சங்க கூட்டத்தைக் கூட்டியுள்ளன.
அனைத்து சங்க கூட்டம் 16/11/2016 அன்று மாலை 3 மணி அளவில், BSNLMS சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
16/11/2016 கூட்டத்தில், பல போராட்ட முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும், போராட்டத்திற்கு இப்போதிலிருந்து தயாராகுங்கள் என நமது பொது செயலர் போர் பிரகடனம் வெளியிட்டுள்ளார்.
BSNL ஐ காத்திட, நிறுவனம் நிலைத்திட, போராட்டத்திற்கு தயாராகுவோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
கூட்டு கடிதம் காண இங்கே சொடுக்கவும்