Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, November 19, 2016

எழில் மிகு எட்டாவது மாநாடு


நமது மாவட்ட சங்கத்தின் 8வது மாநாடு, மல்லசமுத்திரத்தில், பரிமள் கிராண்ட் மஹாலில்,17.11.2016 அன்று  சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்கினார். 

முதல் நிகழ்வாக, தோழர் R . வேலு, மாவட்ட அமைப்பு செயலர், தேசிய கொடியையும், தோழர் N. கௌசல்யன், கிளை தலைவர், ஓமலூர், சங்க கொடியையும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, ஏற்றி வைத்தனர். தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தியபின், மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன் அஞ்சலி உரை நிகழ்த்தினார். 

வரவேற்பு குழு பொது செயலர் தோழர் M . ராஜலிங்கம் வரவேற்பு குழு சார்பாக அனைவரையும் வரவேற்றார். பின்னர், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட சங்கம் சார்பாக அனைவரையும் வரவேற்றார். 

அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S . செல்லப்பா முறைப்படி மாநாட்டை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். அவர்தம் உரையில், BSNL இன்றைய நிலை, 7வது சரிபார்ப்பு தேர்தல் வெற்றி, போனஸ், ஓய்வூதியர்களுக்கு பஞ்சபடி இணைப்பு, 100 சத பென்ஷன் உத்தரவாதம் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி பேசினார். 

AGS பேசி கொண்டிருக்கும்போதே, நமது சிறப்பு அழைப்பாளர் CITU தமிழ் மாநில தலைவர் தோழர் A . சௌந்தர்ராஜன் மாநாட்டிற்கு வருகை புரிந்தார். அரங்கமே எழுந்து நின்று, தோழருக்கு வரவேற்பு கொடுத்தது. 

AGS உரைக்குப்பின் CITU தமிழ் மாநில தலைவர் தோழர் 
A . சௌந்தர்ராஜன், தனது சிறப்பு உரையை துவக்கினார்.  அவர்தம் உரையில், மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பான, 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை, அதன் பாதகங்களை, பொது மக்கள் படும் கஷ்டங்களை எளிய முறையில் விவரித்தார். மத்திய அரசின் பொது துறை விரோத கொள்கைகள், தொழிலாளர் நல சட்டங்களை திருத்தும் முயற்சி, இன்றைய தொலை தொடர்பு சந்தை நிலவரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி பேசினார். தோழரின் 70 நிமிட உரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

தலைவரின் உரைக்குப்பின், தோழமை சங்க நிர்வாகிகள் தோழர்கள் கமலக்கூத்தன் (FNTO), சேகர் (SNEA), சண்முகசுந்தரம்(AIBSNLEA) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 12.30 மணிக்கு அதிகாரிகள் வருகை புரிந்தனர்.

பின்னர், சேவை கருத்தரங்கம் துவங்கியது. மாவட்ட செயலர் தோழர் E . கோபால், அவர்களின் அறிமுக உரைக்கு பின், உதவி பொது மேலாளர் (நிர்வாகம்) கந்தசாமி, துணை பொது மேலாளர்கள் திருவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (நிர்வாகம்), முத்துசாமி (நிதி), அண்ணாதுரை(PLG), தங்கவேல் (CM), ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் A. பாபு ராதா கிருஷ்ணன், சிறப்புரை வழங்கினார். இறுதியாக, சேலம் மாவட்ட முதன்மை பொது மேலாளர் திரு. S . சபீஷ் சேவை சம்மந்தமாக உரை வழங்கினார். 

PGM உரைக்கு பின், மாவட்ட செயலர் தோழர் E . கோபால் சில கோரிக்கைகளை வைத்தார். நிர்வாகம் ஏற்று கொண்டது. அதாவது, மாவட்டத்தில் நிறைய தோழர்கள் பணி ஓய்வு பெறுவதால் ஏற்படும் பணி சுமையை பகிர்ந்து கொள்ளும் விதத்தில், MAN POWER ASSISTANCE பிரிவில் மேலும் பலரை நியமிக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் பல தொலைபேசி நிலையங்களில் பேட்டரிகள் பழுது அடைந்து உள்ளது, அதை சரி செய்ய வேண்டும், மேச்சேரி, கொளத்தூர் பகுதிகளுக்கு கூடுதலாக JE பதவிகள் நிரப்ப படவேண்டும், 500, 1000 ரூபாய் நோட்டுக்களை சேல்ஸ் டீமிலும் வாங்க அனுமதிக்க வேண்டும், CSC யிலும் 944 எண்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் ரொக்கமாக வழங்க வேண்டும், என ஊழியர்கள் கரவொலிக்கிடையே கோரினார். 

மாநாடு உணவு இடைவேளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பின், BSNLEU தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணன், TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

அதற்குப்பின், பொருளாய்வு குழு துவங்கியது. ஆண்டறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.  பின்னர் நடைபெற்ற விவாதத்தில், சார்பாளர் தோழர்கள் கருத்து வழங்கினர். அறிக்கை ஏகமனதாக ஏற்கப்பட்டது. வரவு செலவு கணக்கை தோழர் 
C . செந்தில்குமார் தாக்கல் செய்தார், ஏகமனதாக ஏற்கப்பட்டது. 

பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில், தோழர்கள் 
M . விஜயன், E . கோபால், P. தங்கராஜ், முறையை தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அகில இந்திய மாநாட்டு சார்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நல்ல பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து விடுபடும் தோழர்கள், வரவேற்பு குழு தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர். தோழர் 
P . தங்கராஜ், வரவேற்பு குழு பொருளர் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.

அருமையான மண்டபம், சுவையான உணவு, அன்பான உபசரிப்பு, நேர்த்தியான நிகழ்ச்சி நிரல் என அசத்திய திருச்செங்கோடு வரவேற்பு குழு தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாநாட்டில் சுமார் 525 தோழர்கள் பங்கு பெற்றது சிறப்பான விஷயம். 

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்