8வது மாவட்ட மாநாட்டின், முதல் நிகழ்வாக, 16.11.2016 அன்று மாலை 4 மணிக்கு, மல்லசமுத்திரத்தில், பரிமள் கிராண்ட் மஹாலில் மாவட்ட செயற்குழு துவங்கியது.
மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், அனைவரையும் வரவேற்றார்.
ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், மாவட்ட செயலர் தோழர்
E . கோபால், செயல்பாட்டு அறிக்கையை அறிமுகப்படுத்தி பேசினார். அறிக்கை முழுமையாக படிக்கப்பட்டு, 32 தோழர்கள் விவாதத்தில் பங்கு பெற்றனர்.
பின்னர் அறிக்கை ஏகமனதாக ஏற்கப்பட்டது. மாவட்ட பொருளர் தோழர் C. செந்தில்குமார் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். செயற்குழு ஏக மனதாக ஏற்றுக்கொண்டது.
பின்னர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இரவு 9 மணி அளவில் செயற்குழு நிறைவுபெற்றது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்