சேலம் மெய்யனுர் OD மற்றும் TRA கிளைகளின் இணைந்த 8வது மாநாடு, 14.10.2016 அன்று மெய்யனுர் LMRல் சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் சேகர் மற்றும் மகேந்திரன், கிளை தலைவர்கள் கூட்டு தலைமை தாங்கினர்.
OD கிளை செயலர் தோழர் சம்பத் அனைவரையும் வரவேற்றார். TRA கிளை செயலர் தோழர் பழனிமுத்து அஞ்சலியுறை வழங்கினார்.
தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர், மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார். தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால் மாநாட்டு சிறப்புரை வழங்கினர்.
மாவட்ட உதவி செயலர் தோழர் P. தங்கராஜ், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R . வேலு, கிளை செயலர்கள். தோழர் பாலகுமார் (GM அலுவலகம்), ராஜன் (திருச்செங்கோடு ஊரகம்), செல்வம் (கொண்டலாம்பட்டி), இளங்கோவன் (செவ்வை) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்கப்பட்டது. பின்னர், நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதன்படி, OD கிளைக்கு தோழர்கள் வேலு, வெங்கடேஷ், அழகரசன் தலைவர், செயலர், பொருளராகவும், TRA கிளைக்கு தோழர்கள் குமரேசன், பழனிமுத்து, செந்தாமரைக்கண்ணன், தலைவர், செயலர், பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டது. இறுதியாக, தோழர் சின்னசாமி நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்