Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, October 12, 2016

நீக்கப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்



சென்னை CGM அலுவலகத்தில், நீக்கப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கு, பணி கோரி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்திட, நமது தமிழ் மாநில சங்கம் அரை கூவல் கொடுத்திருந்தது. அதன்படி, 07-10-2016 மாலை சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட உதவி செயலர் தோழர் M. சண்முகம், தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி BSNLEU  மாவட்ட செயலர் தோழர். E . கோபால், தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. தமிழ்மணி ஆகியோர் கண்டன பேரூரை வழங்கினர். BSNLEU சேலம் மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் S . ஹரிஹரன், P . தங்கராஜ், கண்டன உரை வழங்கினர். TNTCWU மாவட்ட பொருளர், தோழர் P . செல்வம் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். 

பரமத்தி வேலூர், மேட்டூர் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்