நமது மாவட்ட சங்கத்தின், கிளை செயலர்கள் கூட்டம் 17.09.2016 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடை பெற்றது. மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்கினார்.
அஞ்சலி நிகழ்வுக்குப்பின், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். 21 கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர்.
கூட்டத்தில், கீழ்கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டது.
01. 20.09.2016 உண்ணாவிரத போராட்டத்தை, GM அலுவலகம் முன்பு சக்தி மிக்கதாக நடத்துவது.
02. அக்டோபர் இறுதிக்குள், கிளை மாநாடுகளை நடத்தி முடிப்பது.
03. 2016 நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில், திருச்செங்கோட்டில் 8வது மாவட்ட மாநாடு நடத்துவது.
04. அடுத்த கிளை செயலர் கூட்டம் 07.10.2016 அன்று நடத்துவது.
05. 07.10.2016 கூட்டத்தில், அகில இந்திய மாநாட்டு நிதி 50 சதமாவது கிளைகள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது.
மேற்கண்ட முடிவுகளை, கிளைகள் முழுமையாக அமுல்படுத்துமாறு, தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழனையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்