நமது தொடர் போராட்டத்தின் பலனாக, 2014-15ம் ஆண்டிற்கு ரூ. 3000 போனஸ் வழங்க CMD ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
2015-2016ம் ஆண்டிற்கான போனசும் விரைந்து முடிவு எட்டப்படும். இரண்டு போனஸும் தீபாவளிக்குள் பட்டு வாடா செய்யப்படும்.
இரண்டு இலக்க போனஸை ஊழியர்கள் மீது திணித்து, ஊழியர்களை ஏமாற்ற நடந்த சூழ்ச்சியை முறியடித்து, நான்கு இலக்க போனஸ் பெற்று தந்த மத்திய சங்கத்திற்கு நமது நெஞ்சு நிறை நன்றிகள்.
தோழர்களே! பல கட்ட போராட்டம் நடத்தி தான் நாம் இந்த கோரிக்கையை வென்று இருக்கிறோம்.
போராடாமல் பெற்றதில்லை!
போராடி தோற்றதில்லை!!
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்