Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, September 6, 2016

24 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி - 08.09.2016 அன்று நாடு தழுவிய தர்ணா

Image result for தர்ணா


அருமை தோழர்களே! 2016 ஜூலை 18 முதல் 20 வரை கூடிய நமது மத்திய செயற்குழு, தேங்கியுள்ள, ஊழியர் பிரச்சனைகளை தீர்வு காண மூன்று கட்ட போராட்ட முடிவினை எடுத்தது. 17.08.2016 அன்று சிவப்பு ரிப்பனுடன் கூடிய, கோரிக்கை அட்டை அணிந்து அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், 08.09.2016 அன்று மத்திய, மாநில, மாவட்ட மட்டங்களில் தர்ணா போராட்டமும், 20.09.2016 அன்று உண்ணாவிரத போராட்டமும் நடத்த நமது மத்திய சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 17.08.2016 அன்று சக்தி மிக்க போராட்டம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. 

தற்போது, இரண்டாம் கட்ட போராட்டமாக, 08.09.2016 அன்று தர்ணா போராட்டம் நடத்த பட வேண்டும். அதன்படி, 08.09.2016 அன்று நமது மாவட்டத்தில் மாலை நேர தர்ணா போராட்டமாக  நடைபெறும். மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமையில், மாலை 3  மணிக்கு துவங்கி 6 மணி வரை, சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு, போராட்டம் நடைபெறும். தோழர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.

கோரிக்கைகள்

1. 01.01.2017 முதல் செய்யப்பட வேண்டிய ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்கு 
2. தற்காலிக போனஸ் ரூ.7000 வழங்கு 
3. ஊதிய தேக்க நிலையை போக்க,  கூடுதல் இன்க்ரீமெண்ட் வழங்கு 
4. SC /ST ஊழியர்களின் பதவி உயர்வில் உத்தரவை முழுமையாக அமுலாக்கு 
உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும். 

போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
கோரிக்கை விளக்க 17.08.2016 நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்