போனஸ் வழங்க வலியுறுத்தி, நமது சங்கம் சார்பாக 01.04.2016 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டமும், 07.04.2016 அன்று நாடு தழுவிய தார்னா போராட்டமும் நடத்த பட்டது. நமது போராட்டத்தை சில "தொழிற்சங்கங்களே" கேலி செய்தன. ஆனால், நாடு முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில், நல்ல ஆதரவும், வரவேற்பும் இருந்தது. அதே போல், அரசாங்கமும் நிர்வாகமும் போராட்டத்தின் வீச்சை உணர்ந்தனர். விளைவு, டெல்லி மத்திய மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன் முத்தரப்பு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
அது போல் ஒரு பேச்சு வார்த்தை, டெல்லி மத்திய மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன் 03.08.2016 அன்று நடை பெற்றது. பேச்சுவார்த்தையில், நமது சங்கத்தின் சார்பில், புரவலர் தோழர். வி.ஏ.என். நம்பூதிரியும், துணைப் பொதுச் செயலாளர் தோழர். ஸ்வபன் சக்ரவர்த்தியும், கலந்து கொண்டார்கள். நிர்வாகம் சார்பில், திரு.ஏ.எம்.குப்தா, பொதுமேலாளர்(SR) அவர்கள் கலந்து கொண்டார்.
PLI ஃபார்முலா இறுதி செய்யப்படாததால், நிர்வாகம், ஊழியர்களுக்கு 2014-15- ஆம் ஆண்டிற்கான தற்காலிக குறைந்த பட்ச PLI- ஆக ரூ. 7000/- அளிக்க மறுத்து விட்டதாக நமது சங்கப் பிரதிநிதிகள் கடுமையாக குற்றம் சாட்டினர். மேலும், 29.3.2016 அன்று மாலையில், சங்கத்துக்கு வாய்மொழியாகத் தகவல் கொடுத்து விட்டு, " போனஸ் கமிட்டி கூட்டத்தை" அவசர கோலத்தில் கூட்டி, கூட்டத்துக்கு வர இயலாத நிலைமையை நமது சங்கம் தெரிவித்து, முறையான கால அவகாசத்துடன் கூட்டத்தை நடத்துமாறு நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்ட பிறகும் கூட, 30.3.2016 அன்று அவசர அவசரமாக நிர்வாகம் கூட்டத்தை நடத்தியது குறித்து நமது சங்கத் தலைவர்கள், கடுமையாக புகார் தெரிவித்தனர்.
குறைந்த பட்ச போனஸ் ரூ. 7000/- வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு இருந்த போதும், 2 இலக்க தொகையை நிர்வாகம் தர முன் வந்ததாகவும், ஊழியர்களை பாதிக்கின்ற மிகப் பெரிய பிரச்னையில், பிரதான அங்கீகார சங்கத்தின் கருத்துக்களை முன் வைக்கும் வாய்ப்பை மறுத்து, ஓர் ஒப்பந்தத்தை எட்டியதாகவும் நமது தலைவர்கள் சுட்டி காட்டியத்திற்கு, நிர்வாகத் தரப்பில் உரிய பதில் அளிக்க இயலவில்லை.
நிர்வாகத்தின் கூட்டு சூழ்ச்சியை உணர்ந்த ஆணையம், ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் பிரச்னையில் 31.8.2016க்கு முன்னதாக தீர்வு காணுமாறு, நிர்வாகத்திற்கு கறாராக உத்தரவு வழங்கியது.
மேலும், அக்டோபர் 2016 முதல் வாரத்தில், பண்டிகைக் காலம் துவங்குவதால் விரைவில் தீர்வு காணுமாறு நமது சங்கத்தின் கோரிக்கையை மனதில் கொண்டு, நிர்வாகத்துக்கு மேலும் கால அவகாசம் அளிக்க முடியாது என மண்டல தொழிலாளர் நல ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார். அடுத்த கூட்டம் 31.8.2016 அன்று நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது, நமது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றி!. "தொழிலாளர்களின்" நியாயமான போராட்டத்தை கூட கொச்சைபடுத்திய சில "தொழிற் சங்கங்களுக்கு" நல்ல குட்டு!!.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்