தோழர்களே! மத்திய FORUM மற்றும் மாநில அறைகூவல்படியும், மாவட்ட FORUM முடிவின் அடிப்படையிலும், 10.08.2016 அன்று BSNL சேவைகளை விளம்பர படுத்தி, பெரும் திரள் பேரணி நடை பெற உள்ளது.
முதன்மை பொது மேலாளர், நமது மாநில செயலர், FORUM அமைப்பின் பிற மாநில சங்க தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பேரணி, காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்து துவங்கும். திருவள்ளுவர் சிலை வழியாக, சேலம் MAIN தொலைபேசி நிலையம் வந்து சேரும்.
மாவட்ட நிர்வாகத்திடம் நாம் பேசியதன் அடிப்படையில், பேரணியில் கலந்து கொள்வோர், On-Duty ஆக கருதப்படுவார்கள். எனவே, கிளை செயலர்கள், தள மட்ட FORUM தோழர்களோடு, இணைந்து பெரு வாரியான தோழர்களை திரட்டி, பேரணியில் பங்கேற்க செய்யுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
கன்வீனர், FORUM மற்றும்
மாவட்ட செயலர், BSNLEU
மாவட்ட FORUM சுற்றறிக்கை காண இங்கே சொடுக்கவும்