Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, April 24, 2016

NFTE க்கு நெற்றியடி


சாட்டையடியும் சாணிப்பாலும் செங்கொடிக்குப் புதிதல்ல! 

ஊழியருக்குத் துரோகம் செய்யும் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுவது தான் உண்மையான தொழிற்சங்கம்! அதுதான் பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம்! அதற்கு நிர்வாகம் சாட்டையடி கொடுக்கிறது என்றால், சங்கம் சரியாகச் செயல்படுகிறது என்பது கூடப் புரியாமல் புலம்புகிறது ஒரு சமரச சங்கம்! 

ஊழியருக்கு எதுநடந்தாலும் “ஆமாம் சாமி” போட்டால் சாட்டையடி தராமல் “தலைவர்களுக்குச் சலுகைகள்“ தருவார்கள்! அது எமக்குத் தேவையல்ல என்று ஊழியர் நலனை முன்னிறுத்தி, தொடர்ந்து போராடுகிறது எமது சங்கம்! 

நியாயம் கேட்கும் சங்கத்திற்கு நிர்வாகம் சாட்டையடி! ஆமாம் சாமி சங்கத்திற்கு நிர்வாகம் சலுகை, பாராட்டு! அப்ப சரியாத் தானே இருக்கு? 

தொடர்ந்து போராடுவோம்! ஊழியர் நலனுக்காக சாட்டையடியை வீரத் தழும்புகளாக ஏற்போம்! சாட்டையடியும் சாணிப்பாலும் எங்கள் முன்னோர்கள் எதிர்கொண்டதுதான்! 

இப்போதும் தொடரும் போராட்டத்தில் இணையட்டும் ஊழியர் ஆதரவு! 

வாக்களிப்பீர் BSNLEU கூட்டணிக்கே!

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
(நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள், திரு A.M.குப்தா (GM SR), கார்பரேட் அலுவலகம், புது டெல்லி அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் காண இங்கே சொடுக்கவும்.)