தமிழ் மாநிலம் சார்பாக, தோழர்கள் A . பாபுராதாகிருஷ்ணன், மாநில செயலர், M . ஜார்ஜ், மாவட்ட செயலர், நாகர்கோவில், S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர், சேலம் ஆகியோர் விவாதத்தில் பங்கு பெற்றனர்.
BSNL ஐ பாதுகாக்க, நல்லதொரு ஊதிய மாற்றம் மற்றும் பஞ்சப்படி இணைப்பை பெற 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் BSNLEU சங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும், SWAS திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவது, அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களை தொடுக்கும் சக்திகளை நிராகரிப்பது, பஞ்சப்படி இணைப்பு, 01.01.2017 முதல் ஊதிய மாற்றதிற்கான பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வலியுறுத்துவது , சிறப்பான ஏற்பாடுகள் செய்த அஹமத் நகர் தோழர்களை பாராட்டுவது உள்ளிட்ட தீர்மானங்களும்,
7வது சரிபார்ப்பு தேர்தலில், 50 சதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெறுவது, 08.03.2016, 22.03.2016,23.03.2016,14.04.2016,01.05.2016 ஆகிய தேதிகளில் வரவுள்ள முக்கியமான தினங்களையும் சக்தியாக கொண்டாடுவது, BSNL ஐ லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவது, உள்ளிட்ட முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது.
சிறப்பான செயற்குழு உற்சாகத்துடன் நிறைவு பெற்றது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்