Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, February 19, 2016

துவங்கியது விரிவடைந்த மத்திய செயற்குழு...




நமது மத்திய சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம், அஹமத் நகரில் இன்று, 19.02.2016 எழுச்சியுடன் துவங்கியது. 

முதல் நிகழ்வாக தேசிய கொடியை, நமது அகில இந்திய தலைவர், தோழர் பல்பீர் சிங் ஏற்றி வைத்தார். சங்க கொடியை நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, வின்னதிரும் கோஷங்களுக்கிடையே, ஏற்றி வைத்தார். 

நமது சங்க புரவலர் தோழர் V .A .N .நம்பூதிரி, முன்னிலை வகிக்க, தியாகிகள் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தியாகிகள் நினைவு ஸ்துபிக்கு வீர வணக்கம் செலுத்திய பின், நிகழ்வுகள் துவங்கின. 

மகாராஷ்டிரா மாநில CITU பொது செயலர் தோழர் டாக்டர் கரட் முறைப்படி, செயற்குழுவை துவக்கி வைத்தார். அஹ்மத்நகர் மூத்த பொது மேலாளர் வாழ்த்துரை வழங்கினார். 

பின்னர் தொலை தொடர்பு மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர் V .A .N . நம்பூதிரி சிறப்புரை வழங்க, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, விரிவாக கூட்ட நோக்கங்களையும், விவாத பொருளையும் அறிமுக படுத்தி விளக்க உரை வழங்கினார். 

நாடு முழுவதுலுமிருந்து மாவட்ட செயலர்கள் அனைத்து மாநிலத்திலுமிருந்து இந்நிகழ்வில், கலந்து கொள்கின்றனர். நமது மாவட்டம் சார்பாக, மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், செயற்குழுவில் பங்கேற்கிறார். 

சார்பாளர் விவாதம் துவங்கி, நடைப்பெற்று வருகிறது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்