06.02.2016 அன்று "கிளை செயலர்கள்" கூட்டம், சேலத்தில், மாவட்ட சங்க அலுவலகத்தில், சிறப்பாக நடைப்பெற்றது. கூட்டத்திற்கு, தோழர். S. தமிழ்மணி, மாவட்டத் தலைவர் தலைமை தாங்கினார். அஞ்சலி நிகழ்விற்கு பின், தோழர் G . விஜய்ஆனந்த், மாவட்ட உதவி பொருளர், அனைவரையும் வரவேற்றார்.
தோழர் E . கோபால், மாவட்ட செயலர் விவாதக் குறிப்பை அறிமுகபடுத்தி, இன்றைய கூட்டத்தின் நோக்கங்களையும், எதிர்கால கடமைகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.
பின்னர் 21 கிளை செயலர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள் சின்னசாமி, விஜயன், ஹரிஹரன், சண்முகம், வேலு, ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கிழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
01. அனைத்து கிளைகளிலும் உடனடியாக கிளைக் கூட்டம் நடத்துவது.
02. வேலூர் விரிவடைந்த மாநில செயற்குழுவில் அனைத்து கிளை செயலர்களும் முழுமையாக, குறித்த நேரத்தில் கலந்து கொள்வது.
03. விரிவடைந்த மத்திய செயற்குழு முடிந்தப்பின், விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை சேலத்தில் நடத்துவது.
04. 7வது சரிபார்ப்பு தேர்தல் பணிகளை உடனடியாக துவங்குவது, வெற்றியை உறுதிப் படுத்துவது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்