Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, January 11, 2016

7 வது சங்க சரிபார்ப்பு தேர்தல் அட்டவணை

7 வது சங்க அங்கீகார தேர்தல் தேர்தல் 26.04.2016 . . .


11.01.2016, இன்று, புதுடில்லியில், 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் சம்மந்தமாக, அனைத்து சங்க தலைவர்களை உள்ளடக்கிய சிறப்புக் கூட்டத்தை, நிர்வாகம் கூட்டியிருந்தது. 

நமது சங்கம் சார்பாக நமது பொதுச் செயலர் தோழர் P . அபிமன்யூ , அகில இந்திய தலைவர் தோழர் பல்பீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிர்வாக தரப்பில், திரு. சமீம் அக்தர், PGM (SR), திரு. ராம் சகல், கூடுதல் GM (SR) ஆகியோர் கலந்து கொண்டனர். 

6வது சரிபார்ப்பு தேர்தலில் பங்கு பெற்ற அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

அதில், கிழ் கண்ட தேர்தல் அட்டவணையை, நிர்வாகம் முன்மொழிந்தது. 

 கலந்து கொள்ளும் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தல்           14/01/2016

தேர்தல் தேதி அறிவிப்பு                                                                          18/02/2016

விண்ணப்பங்களை விலக்கிக்கொள்ள கடைசி தேதி                  22/02/2016

தேர்தல் நடைபெறும் நாள்                                                                     26/04/2016

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்                                          28/04/2016

முடிவு அறிவிக்கும் நாள்                                                                        28/04/2016


தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்