ஆத்தூர் நகர மற்றும் ஊரக கிளை சங்கங்களின், இனைந்த கிளை சிறப்பு கூட்டம், 26.12.2015 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, கிளை தலைவர்கள், தோழர் K . வரதராஜன், (நகரம்) மற்றும் B . பெரியசாமி, (ஊரகம்) கூட்டு தலைமை தாங்கினர்.
மூத்த தோழர், P . குமாரசாமி அஞ்சலி உறை நிகழ்த்த, தோழர் T. செல்வராஜ், நகர கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார்.
தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் துவக்க உரை வழங்கினார். தோழர் E . கோபால், மாவட்ட செயலர் சிறப்புரை வழங்கினார்.
மாவட்ட உதவி தலைவர் தோழர் V . சின்னசாமி, மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், வாழ்த்துரை வழங்கினார்கள்.
இறுதியாக, தோழர் G . R . வேல்விஜய், ஊரக கிளை செயலர் நன்றி கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார். திரளான தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது சிறப்பம்சம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்