Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 25, 2015

கடும் மழை வெள்ளத்தில் தொலை தொடர்பு சேவை பாதிப்புகள் விவரம் - மத்திய அமைச்சர் தகவல்

Image result for RAVI SHANKAR PRASAD IN PARLIAMENT


நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, 23.12.2015 அன்று மத்திய அமைச்சர் அளித்த பதிலில், சமிபத்திய சென்னை கடும் மழை வெள்ளத்தில் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் சேவை பாதிப்பு  (Network Failure) விவரங்களை வெளியிட்டார். 

பாதிக்கப்பட்ட இடங்களில் நிறுவனங்களின் மொத்த டவர் (Total No. of BTS ) எண்ணிக்கை, அதில் எத்தனை பாதிக்கபட்டது, (Total No. of BTS affected) எத்தனை சரிசெய்யபட்டது(Total No. of BTS restored) போன்ற விவரங்கள் அதில் உள்ளது. 

பாதிக்கப்பட்ட BTS  டவர்களின் எண்ணிக்கை சத வீத அடிப்படையில்,

MTS               -  80%
Aircel             -  69%
Airtel              -  41%
TATA             -  37%
Idea                 -  31%
Vodafone        -  24%
BSNL              -  20%

பாதிக்கப்பட்ட நேரங்களில் சேவை வழங்க இயலாது. அதன்படி பார்த்தால் நாம் மட்டும் தான் அதிக சேவை வழங்கியுள்ளோம் என தெரிகிறது.

பாதிக்கப்பட்ட சேவைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டுவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார் 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
விவரமான அறிக்கை காண இங்கே சொடுக்கவும்