09.12.2015, ஒரு நாள், அனைத்து பணிகளையும் ஒதுக்கிவிட்டு, வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யுங்கள் என்ற மாவட்ட சங்கத்தின் அழைப்பை ஏற்று, அனைத்து கிளைகளிலும் மக்கள் நல இயக்கம் சிறப்பாக நடை பெற்றுள்ளது.
10.12.2015 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழுவில், கிளைகள் கொடுத்த நிதி மனதிற்கு நிறைவாகவும், வர்க்க நல, சமுதாய நலப்பணிகளில் நமது தோழர்களின் அர்ப்பணிப்பையும், உணர்வுகளையும், வெளிபடுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
ஆம் தோழர்களே! மாவட்டம் முழுவதும் ரூ. 66,630 வசூல் செய்யப்பட்டு, மாவட்ட சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயமாகும்.
11.12.2015 அன்று உடனடியாக மாவட்ட சங்கமும், நிதி முழுவதையும், மாநில சங்கத்திற்கு அனுப்பி வைத்தது. மாநில சங்கம் நமது மாவட்ட சங்கத்தை மனதார பாராட்டியுள்ளது.
ஒரே நாளில், நல்ல ஒரு தொகையை வசூலித்து வழங்கிய அனைத்து கிளைகளுக்கும், கிளை செயலர்களுக்கும், மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், முன்னணி ஊழியர்களுக்கும், பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!.
நிதி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சு நிறை நன்றிகள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
கிளை வாரி வசூல் விவரம் காண இங்கே சொடுக்கவும்