ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், மாவட்ட செயலர் தோழர் E . கோபால் அவர்கள், விவாத குறிப்பை அறிமுகப்படுத்தி, விளக்க உரை வழங்கினார். தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.
பின்னர் 38 செயற்குழு உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கு பெற்றனர். இடையில், TNTCWU மாநில அமைப்பு செயலர் தோழர் செல்வம் அவர்கள், வாழ்த்துரை வழங்கினார்.
அதே போல், உணவு இடைவேளைக்கு முன்பு சேலம் MAIN கிளையில் இருந்து சமிபத்தில் ஒய்வு பெற்ற தோழர் ரங்கசாமி மற்றும் GM அலுவலக கிளை தோழியர் மோகனம்பாள் பொன்ராஜ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
காலை முதல் மாலை 5.30 மணி வரை சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற விவாதத்திற்குப்பின், மாவட்ட செயலர் கடைசியாக தொகுப்புரை வழங்கினார்.
முன்னணி ஊழியர்கள் உட்பட கூட்டத்தில், சுமார் 70 தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக, GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார் அவர்கள் , நன்றி உரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கிழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
1. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூரல் மற்றும் அர்பன் பகுதியில், ஒரே மாதிரியான Tender இருக்க வேண்டும். இல்லையேல், Steering Committee முடிவு அடிப்படையில், தல மட்ட போராட்டத்தில் இறங்குவது.
2. Local Council கூட்டத்தை உடனடியாக கூட்ட, நிர்வாகத்தை வலியுறுத்துவது.
3. Works Committee கூட்டங்கள் இனி, இரண்டு வருவாய் மாவட்டத்தையும் இனைத்து பொது மேலாளர் தலைமையில் நடத்த நிர்வாகத்தை கோருவது.
4. காலியாக உள்ள தல மட்ட கவுன்சில் இடங்களை தோழர்கள் N . செல்வராஜூ, TTA, ராசிபுரம் மற்றும் P . செல்வம், TM, கொண்டலாம்பட்டி, ஆகியோரை கொண்டு நிரப்புவது.
5. அடுத்த செயற்குழுவை நாமக்கலில், முப்பெரும் விழாவாக நடத்துவது.
6. 20.12.2015 அன்று நாமக்கலில் நடைபெறும் TNTCWU மாவட்ட செயற்குழுவிற்கு உதவுவது.
7. வெள்ள நிவாரண தொகை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. எஞ்சியுள்ள கிளைகளும் 14.12.2015 க்குள் வசூலித்து மாவட்ட சங்கத்திற்கு வழங்குவது.
பொதுவாக, செயற்குழுவில் சேவை சம்மந்தமான விவாதம் தான் அதிகமாக இருந்தது. சேவை சம்மந்தமான நமது கோரிக்கைகள், ஆலோசனைகள் ஏற்று அமுல்படுத்துவதில், தல மட்டத்தில் நிர்வாகத்திடம் காணப்படும் மெத்தன போக்கு, அதே போல், ஊழியர்களின் சிறு சிறு பிரச்சனைகள் சுட்டி காட்டப்பட்டது. இவ்விரண்டிலும், மெத்தன போக்கு நீடிக்குமானால், தல மட்ட போராட்டத்தில் குதிப்பது என்பதும் ஒரு முக்கியமான முடிவாகும்.
நல்ல ஒரு அறு சுவை உணவு வழங்கிய, தோழியர் மோகனாம்பாள் பொன்ராஜ் அவர்களுக்கு செயற்குழு பாராட்டுதலும், நன்றியும் தெரிவித்தது .
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்