01.01.2007 முதல் 07.05.2010 வரை பணியில் சேர்ந்த தோழர்களுக்கு ஏற்பட்ட சம்பள இழப்பை சரி செய்ய தொடர்ந்து போராடி வந்தோம்.
அதன் பயனாக, நேரடி நியமன TTA தோழர்களுக்கு ஒரு கூடுதல் இன்க்ரிமென்ட் வழங்கி 13.07.2015 அன்று கார்பரேட் அலுவலகம் சாதக உத்தரவு வெளியிட்டது.
போராடி பெற்ற இந்த பலன்களை உடனடியாக தோழர்களுக்கு சென்று சேர்க்க ஏதுவாக, மாவட்ட நிர்வாகத்தை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினோம்.
நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, வேலைகள் முடிவடைந்து விட்டதாக, நமக்கு தகவல் வந்துள்ளது. புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க பட்டுள்ளது.
அதிகபட்சமாக, ரூ.66000 வரை நிலுவை தொகை இந்த மாத சம்பளத்துடன், வங்கிக்கு அனுப்ப உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விரைந்து பணியை நிறைவு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்.
பலன் பெற உள்ள 46 இளம் TTA தோழர்களுக்கு நமது நல் வாழ்த்துக்கள்.
போராடாமல் பெற்றதில்லை!
போராடி தோற்றதில்லை!!.
மகிழ்ச்சியுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்