FNTOBEA சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர் P.ஆண்டியப்பன் அவர்கள் 12.07.2015 அன்று அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். தோழர் ஆண்டியப்பன் அவர்கள் தந்தி பிரிவில் பணியாற்றினாலும் கூட ஊழியர் பிரச்சனைகளில் கவனம் கொண்டு தீர்ப்பதற்கு முயற்சி எடுத்தவர். தந்திப் பகுதியின் FNTO மாநிலச் செயலராக பல ஆண்டுகாலம் பணியாற்றிய அனுபவம் மிக்க தோழர். BSNL ஊழியர் சங்கத்துடன் இணைந்து செயலாற்ற FNTOBEA சங்கத்தை உருவாக்கி தனது இறுதி மூச்சு வரை இணைந்து செயலாற்றியவர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பல ஆண்டுகளுக்கு முன் செய்த பின்னரும் இயக்கப் பணியை விடாது ஆற்றிய அவரது உறுதி நம்மை வியக்க வைக்கிறது. தோழர் ஆண்டியப்பன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இயக்க தோழர்களுக்கும் சேலம் மாவட்ட சங்கம் தனது அஞ்சலியை செலுத்துகிறது.
Monday, July 13, 2015
கண்ணீர் அஞ்சலி....