Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, June 25, 2015

ரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Image result for indian railway employee


நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த பிபேக் தேப்ராய் கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினம்”  கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது. 

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என டல்ஹௌசி மத்திய செயற்குழு அறைகூவல் விட்டுள்ளது. அதன்படி, நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் 2015 ஜூன் 30ஆம் தேதி அன்று  ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன் .
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்