திருச்செங்கோட்டில் நமது மாவட்ட செயற்குழு 21.06.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது. காலை 11 மணிக்கு துவங்கிய செயற்குழுவிற்கு, மாவட்ட உதவி தலைவர் தோழர் V . சின்னசாமி, தலைமை தாங்கினார். கொடி ஏற்றதுக்குபின், திருச்செங்கோடு நகர கிளை செயலர் தோழர் M . ராஜலிங்கம், வரவேற்புரை வழங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் P . தங்கராஜ், அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
செயற்குழுவை மாநில உதவி செயலர் தோழர் S. தமிழ்மணி, துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார். ஆய்படு பொருளை விளக்கி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார்.
CITU நாமக்கல் மாவட்ட துணை தலைவர் தோழர் K . ரங்கசாமி, வாழ்த்துரை வழங்கினார்.
விவாதத்தில் 35 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
செயற்குழுவில் சமிபத்தில் பணி ஒய்வு பெற்ற தோழர்கள் ஆறுமுகம், ரங்கசாமி, ராமலிங்கம் கௌரவிக்கப்பட்டனர்.
மாற்று சங்கத்தில் இருந்து விலகி நமது பேரியக்கத்தில் இனைந்த தோழர்கள் பாராட்டபட்டனர்.
இறுதியாக மாலை 5.45 மணிக்கு திருச்செங்கோடு ஊரக கிளை செயலர் தோழர் K . ராஜன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையான உபசரிப்பு, அறுசுவை உணவு, அமைதியான சுழல் என சிறப்பான ஏற்பாடுகளை செய்த திருச்செங்கோடு தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
1. 02.09.2015 ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அனைத்து சங்கங்களையும் உள்ளடிக்கி வெற்றிகரமாக்குவது.
2. மாநில செயற்குழு முடிவின்படி, மேற்கு மண்டல BSNLEU நிர்வாகிகள் பயிற்சி மூகாமை சேலத்தில் சிறப்பாக நடத்துவது. கிளைகளுக்கான நிதி கோட்டாவை, மாவட்ட மைய கூட்டத்தில் முடிவு செய்து தகவல் தெரிவிப்பது.
3. சொசைட்டி அந்நியாய வட்டி உயர்வை எதிர்த்து நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக்குவது. 29.06.2015 க்குள் கிளைகள் கையெழுத்து க்களை மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது. அன்று மாலையே, சென்னைக்கு தபாலில் மாவட்ட சங்கம் அதனை அனுப்பி வைக்கும்.
4. FORUM இயக்கத்தை வெற்றிகரமாக்குவது.
5. புதிய உறுப்பினர் படிவங்களை கிளைகள் 10.07.2015 க்குள் மாவட்டதிற்க்கு சமர்பிக்க வேண்டும்.
6. வேலை குழு, கவுன்சில் கூட்டங்களை உடனடியாக கூட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுப்பது.
7. கிளை மாநாடுகள், அக்டோபரில் துவங்கி டிசம்பர் 2015 க்குள் அனைத்து கிளைகளிலும் நடத்தி முடிப்பது.
8. மேட்டூரில் அடுத்த செயற்குழுவை நடத்துவது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்