Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, May 19, 2015

மே -19,தோழர்.மோனி போஸ் 5 வது ஆண்டு நினைவு நாள்...

நாம் அன்போடு மோனி போஸ் என அழைக்கப்படுபவரின் இயற் பெயர் தோழர்.மணி கோபால் பாசு ஆகும். தோழர். மோனிபோஸ் அவர்கள்  1925-ம் ஆண்டு 15- ம் தேதி, இன்றைய "பங்களா தேஷ்" ஆக உள்ள நாட்டின் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார்.அதன் பின் அவருடைய குடும்பம் "கல்கத்தா"விற்கு இடம் பெயர்ந்தது. இவருடைய தந்தை முன்பே இறந்து விட்டார். தபால்-தந்தி  தொழிற்சங்க இயக்கத்தில் மிக முக்கிய தலைவராக திகழ்ந்த தோழர். கே.ஜி.போஸ், இவருடைய மூத்த சகோதரர் ஆவார்.இவர்கள் இருவருக்கும் தபால்-தந்தி  துறையில் எழுத்தர் பனி கிடைத்தது. 
தோழர்.மோனி போஸ் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 25-ம் நாள் கல்கத்தாவில் உள்ள D.E.T அலுவலகத்தில் எழுத்தர் பணியில் அமர்ந்தார். ஆனால் 1949 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தத்தை தலைமை தாங்கினார் என்று,கே.ஜி.போஸ் & மோனி போஸ் ஆகிய இருவரையும் இலாகா "டிஸ்மிஸ்" செய்தது. பின் இறுதிவரை அவர்களை மீண்டும் பணிக்கே எடுத்துக்கொள்ளவே இல்லை.  அதன் பின் தோழர் மோனி போஸ் "இந்டியன் ஆக்ஸிசன்  லிமிட்டெட்டில் பணிக்கு சேர்ந்தார். 1949 ஆம்  ஆண்டு தபால்-தந்தி துறை பணியில்  இருந்து நீக்கப்பட்டாலும், தொடர்ந்து  தபால்-தந்தி துறை சங்கங்களின் நீண்ட தொடர்பை வைத்திருந்த தோடு, தொடர்ந்து தொழிலாளிகளுடன் தொடர்பை உயிரோட்டமாக வைத்திருந்த தோடு, அன்று தொழிற்சங்கத்தில் இருந்த திருத்தல்வாத  தலைமைக்கு  எதிராக தொடர் போராளியாக திகழ்ந்தார்கள். 
1991-ம் ஆண்டு போபாலில் நடை பெற்ற அகில இந்திய மாநாட்டில்  NFTE சங்கத்துடன் இணைக்கப்பட்ட அகில இந்திய டெலிகாம் எம்ப்ளாயிஸ்  யூனியன் 3-ம பிரிவுவின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 40 ஆண்டுகாலமாக பொதுச் செயலராக இருந்த O.P குப்தாவை தோற்கடித்து பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்.மோனி போஸ், அதே சங்கத்தில் 1994-ம் ஆண்டு அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.2001-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி விசாகபட்டின அமைப்பு மாநாட்டில் , ஏற்கனவே செயல்பட்டு வந்த  டெலிகாம்  துறை BSNL என்ற கார்பரேசனாக மாற்றப்பட்ட சூழலில், அன்று டெலிகாம் பகுதியில் செயல்பட்டு வந்த 7 தொழிற்சங்கங்களை  ஒன்றாக இணைத்து " BSNL EMPLOYEES UNION" உருவாக்கி அதனுடைய "பார்டன்" ஆக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தார் தோழர். மோனி போஸ்.மேற்கு வங்க மாநில அரசின் "சம்பளக்குழு" கமிட்டியில் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதே போன்று "12-th கமிட்டியோடு தொடர்ந்து, நெருக்கமான தொடர்பை வைத்திருந்தார். மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் மிக சக்தியான இணைப்புக்குலுவை உருவாக்கி தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார். 
நல்ல பல ஆலோசனைகளை தொழிலாளர் வர்க்கம் பாராட்டக்கூடிய அளவில் அவ்வப்போது வழங்கிவந்தார்.தோழர் மோனி போஸ் அவர்களுடைய மணைவி தோழியர்.ஜெயஷித்னா  தபால்-தந்தி துறை பணியில் இருந்தார். இவருடைய மகன் Dr.கெளதம் பாசு, மற்றும் சுஷ்மிலா பாசு என்ற மகனும்,மகளும் உள்ளனர். இந்நாளில் தோழர்.மோனி போஸ்  அவர்களின் நினைவை போற்றுவோம்

தோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர்