ஊழியர் தரப்பு பல்வேறு பிரச்சனைகளில் நிர்வாகத்தின் தாமதத்தை NJCM செயலர் என்ற முறையில் நமது பொதுச் செயலர் தோழர்.P. அபிமன்யு சுட்டிக்காட்டினார் .
குறிப்பாக கவுன்சில் மீட்டிங் காலதாமதமாக நடத்துவது, மாநில மற்றும் மாவட்டமட்டங்களில் ஒரு தவறான் முன் உதாரணமாக ஆகிவிடும் ஆதலால் இது தவிர்க்கப்பட வேண்டும், டிராப்மேன்களுக்கு ஒரு இளநிலை பொறியாளருக்கான தேர்வு நடத்தவேண்டும் என்ற முடிவு இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. JTO RR and E-1 pay scale தாமதம், இரவு இலவசமாக பேசும் வசதி ஊழியர் அனைவருக்கும் விரிவுபடுத்துதல், அலுவலகங்களில் கூட்டம் போட அனுமதி மறுப்பு போன்ற பிரச்சனைகளையும் நினைவுபடுத்தினர்.
பிறகு மற்ற பிரச்சனைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
22.07.1997 and 08.09.2000, இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற தேர்வுகளில் இடஒதுக்கீடு அமுலபடுத்தப்படவேண்டும்:
இது பற்றி DoP&T –க்கு குறிப்பு அனுப்பபட்டுள்ளது. அதுவந்த பிறகேமுடிவு எடுக்கமுடியும்.
பென்ஷன் 60 சதவீதம் நாம் தருவது நிறுத்தப்பட வேண்டும்:
இதுபற்றி DoT.-க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதுவரும்வரை காத்திருக்கவேண்டும்.
BSNL MRS மறுபரிசலனை செய்யப்படவேண்டும்:
இதுகுறித்து ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
30-9-2000 முன்னாள் TSM ஆக இருந்தவர்கள் நேரடியாக டெலிகாம் மெகானிக்களாக நியமிக்கப்பட வேண்டும்:
இதுகுறித்த விபரங்களை மாநில நிர்வாகத்திடம் பெற்று DOT –க்கு அளித்து அதன் பிறகு ஒப்புதல் பெற்ற பிறகு அமுல்படுத்தப்படும்.
ஒர்க்ஸ் கமிட்டி மீட்டிங் மாநில மற்றும் அகில இந்திய மட்டத்தில் நடத்தப்பட வேண்டும். மாவட்ட அளவில் சரியாக நடத்தப்படவில்லை:
இதுகுறித்து ஆலோசித்து முடிந்தால் மாநில அளவில் நடத்த முயற்சி செய்யப்படும்.
NEPP பிரச்சனையில் உள்ள முட்டுக்கட்டைகள் நீக்கப்படவேண்டும்:
இதுவரை மொத்தமாக 16000 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அதுவும் குறிப்பாகs 8501 ஊழியர்கள் NE-3 pay scale-ல் பதவிஉயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.:
இது குறித்து ஒரு சரியான முடிவு எடுக்கப்பட்டு கூடியவிரைவில் பிரச்சனை தீர்க்கப்படும் பெண்களூக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் தொந்திரவு குறித்து விசாரிக்க ஏற்படுத்த்ப்பட்ட கமிட்டியில் சங்கத்தின் சார்பாக ஒரு பெண் ஊழியர் நியமிக்கப்பட வேண்டும்:
இது குறித்து அரசு வழிகாட்டுதல்படியே கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
MTNL பகுதியில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் ரூ.200/- சிம் தரப்படவேண்டும். மற்ற கம்பெனி நம்பர்களுக்கும் பேச இந்த சிம்மில் அனைவருக்கும் வசதி தரப்பட வேண்டும்:
இது குறித்து கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளுக்கு மெயின் தீவிலிருந்து கடலுக்கடியில் கேபிள் அமைக்க உத்தரவு இடவேண்டும்.
இது மத்திய அரசின் முடிவு ஆகும். சேட்டிலைட் மூலமாக அந்தமான் பகுதிகளுக்கு பிராட்பேண்டி வசதி விரிவுசெய்யப்படும்.
அந்தமான் பகுதியில் மூன்றாம் (TTA and Sr.ToA) பிரிவு ஊழியர்கள் பணிசெய்ய ஆள் எடுக்கப்படவேண்டும். அங்கு பற்றாகுறை அதிகமாக உள்ளது.
நேரடி நியமனமாக TTA –க்கள் நியமிக்கபட உள்ளனர்.
வீட்டு வாடகைப்படி நகரத்திலிருக்கு எட்டு கிலோமீட்டரில் இருப்பவருக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்:
இதுமத்திய அரசின் முடிவு. நாம் எதுவும் செய்ய இயலாது.
தொழிலாளர் குடியிருப்பில் உள்ள காலி குடியிருப்பை கணவனை இழந்த தொழிலாளியின் மனைவிற்கு தரப்படவேண்டும்:
இதற்கு ஒப்புகொள்கிறோம். விரைவில் உத்தரவு அனுப்பப்படும்.
நக்ஸல் பகுதிகளில் வேலைபார்க்கும் ஊழியருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்:
இது குறித்து பரிசீலிக்கப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும்