Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, March 21, 2015

மத்திய சங்க செய்திகள்



1. ஓய்வு பெற்ற தோழர்களுக்கு மருத்துவப்படி வழங்குவதற்கு நிர்வாகம் ஏற்கனவே ஒத்துக்கொண்ட நிலையில்,  தற்போது அவர்களுக்கு WITH VOUCHER முறையில் செலவாகும்  தொகையின் விவரத்தை BSNL நிர்வாகம் கேட்டுள்ளது.

2. அனைத்து மாவட்ட GMகளும் தங்கள் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து BSNL மேம்பாட்டிற்கான வழிமுறைகளை விவாதித்து உரிய அறிக்கை அளிக்க  BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.


3. DOTயில் இருந்து BSNLக்கு வழங்கப்படும் நிதிச்சலுகை இன்னும் வராமல் இருப்பது குறித்து நமது சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

4. 2018-19ம் நிதியாண்டில் லாபம் பெறும் நிறுவனமாக BSNL மாறிவிடும் என நமது CMD கூறியுள்ளார். இந்த ஆண்டு 5 சத வளர்ச்சியும் 29000 கோடி வருமானமும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும் 4800 கோடி செலவில் 27000 செல் கோபுரங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட PHASE VII திட்டம் ஜூன் 2015க்குள் இறுதிப்படுத்தப்பட்டு விடும் எனவும் கூறியுள்ளார்.

5. அங்கீகரிக்கப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு  IMMUNITY FROM TRANSFER..  மாற்றலில் விதிவிலக்கு அளிக்கும் உத்திரவில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் நமது தலைவர்களிடம் உறுதியளித்துள்ளது.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்