Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, March 21, 2015

மீத்தேன் திட்டம் ரத்தாகிறது -

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க மத்திய - மாநில அரசுகள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர்வளம் முற்றிலும் அழிந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்ற அச்சம் அனைத்து பகுதி மக்களிடமும் ஏற்பட்டிருந்தது. விவசாயிகள் மற்றும் மாவட்ட மக்கள் கடுமையான தொடர் போராட்டங் களில் ஈடுபட்டனர்.இதனால்மீத்தேன் திட்டம் தொடர் பான பணிகள் தடுத்து நிறுத்தப் பட்டிருந்தன. மீத்தேன் திட்டத்தை முற்றாக ரத்துசெய்ய வேண்டுமென்று கருத்து கேட்பு கூட்டம்நடைபெற்றது.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர்டி.கே.ரங்கராஜன், மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீத்தேன் எடுப்பதற்காக கிரேட்ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் உடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.