09.12.2014 இன்று நடைபெற்ற PLI கமிட்டி கூட்டத்தில் தோழர்கள் P அபிமன்யு ,இஸ்லாம் அஹமது ,தோழர் பல்பீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர் .ஊழியர் தரப்பு சார்பாக PLI நிர்ணயம் என்பது தேசிய அளவில் உற்பத்தி அடிப்படையில் இருக்க வேண்டும் என கடுமையாக வலியுறுத்தினர் .27-06-2014 அன்று JAC சார்பாக இயக்குனர் (மனிதவளம் ) அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்தையில் நிர்வாகம் ஏற்று கொண்டதை ஊழியர் தரப்பு சுட்டி காட்டியது .மேலும் ஊழியர் தரப்பு மொபைல் இணைப்பு சாதனையை PLI கணக்கிடுவதற்கான Key Parameter Indicators (KPIs) இல் சேர்க்க வேண்டும் என்றும் CDMA இணைப்புகள் கொடுப்பதை சேர்க்க கூடாது என்றும் வலியுறுத்தியதை நிர்வாக தரப்பு ஏற்று கொண்டது .2010-11, 2011-12 மற்றும் 2012-13 ஆண்டுகளில் இணைப்புகளில் கொடுப்பதில் நமது சாதனைகளையும் ,வர உள்ள ஆண்டுகளின் இலக்குகளையும் கொடுக்க வேண்டும் என ஊழியர் தரப்பு வலியுறுத்தியது .நிர்வாகம் அதை விரைவில் வழங்குவதாக ஒத்து கொண்டது .அடுத்த கூட்டம் 27-01-2014 அன்று நடைபெறும் .
2. நமது தரைவழி இணைப்பு ,Broad Band இணைப்புகளை கையாளும் கால் சென்டர் சேவைகளை தனியாரிடம் ஒப்படைப்பதை ஆட்சேபித்து நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் அபிமன்யு மற்றும் உதவி பொது செயலர் தோழர் பாலகிருஷ்ணா 08-12-2014 அன்று நமது இயக்குனர் (CFA) அவர்களை சந்தித்து கடிதம் கொடுத்து உள்ளனர் .இந்த முடிவால் சென்னையில் 70 க்கும் மேற்பட்ட SRTOAs உபரி ஆககூடிய நிலையை நமது சங்கம் சுட்டி காட்டியது .
3. மொபைல் சேவை விரிவாக்க பணி தாமதம் செய்யப்படுவதை சுட்டி காட்டி நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் அபிமன்யு மற்றும் உதவி பொது செயலர் தோழர் பாலகிருஷ்ணா 08-12-2014 அன்று நமது இயக்குனர் (CM ) அவர்களை சந்தித்தனர் .7 ம் கட்ட விரிவாக்க பணியில் 9 மில்லியன் இணைப்புகள் வழங்கப்பட்டது என்றும் 8 ம் கட்ட விரிவாக்கம் 2015 தொடங்க உள்ளதாகவும் அதில் 10 மில்லியன் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளதாக இயக்குனர் (CM ) தெரிவித்து உள்ளார் .கம்பெனியின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து, தொழிற்சங்க பிரதிநிதிகளோடு தொடர்ந்து ஆலோசிக்க வேண்டும் என நமது வேண்டுகோளை இயக்குனர் (CM ) ஏற்று கொண்டார் .
4. திருமதி யோஜன தாஸ் அவர்கள் புதிய இயக்குனர் (நிதி) ஆக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் .
5. தோழர் .முரளிதரன் நாயர் , அகில இந்திய முன்னாள் உதவி பொது செயலர் 30-11-2014 அன்று 40 ஆண்டு சேவை முடித்து பணி ஓய்வு பெற்றுள்ளார் .நமது சங்கம் முக்கிய கொள்கை முடிவுகளை வகுப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்ததை அகில இந்திய சங்கம் நினைவு கூர்ந்தது. அவர்க்கு ஒரு விரிவான பிரியாவிடை கூட்டம் டிசம்பர் 18 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது .அக் கூட்டத்தில் . கொடிவேரி பாலகிருஷ்ணன், கேரள மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளார் .CHQ அவரை வாழ்த்தி உள்ளது .
6. நமது OFC மற்றும் காப்பர் கேபிள்களை தனியார் நிறுவனங்கள் சேதப்படுத்துவதை தடுக்க தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இயக்குனர் (CFA) அவர்களை நமது சங்கம் வலியுறுத்தி உள்ளது .
தோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர்