JAC போராட்ட அறைகூவல்படி நாடு முழுவதும் 27.11.2014 அன்று வேலை நிறுத்த போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. நமது மாவட்டத்தில் உள்ள மொத்த ஊழியர்கள் 1251 (STR 20 உட்பட) வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றவர்கள் 774
விடுப்பு 210 பணி புரிந்தவர்கள் 266
மாவட்டம் முழுவதும் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் மூடப்பட்டன. பெரும்பாலான அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர்.
15 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்திற்க்காக தயாரிப்பு பணியில் ஈடுபட்ட JAC தலைவர்கள், அனைத்து சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் சேலம் மாவட்ட JAC யின் வாழ்த்துக்கள்
மகத்தான வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற அனைத்து வீரர்களுக்கும் சேலம் மாவட்ட JAC சார்பான வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.
தோழமையுடன்
E. கோபால்,
கன்வீனர், JAC மற்றும்
மாவட்ட செயலர் BSNLEU